districts

img

தென்னை மரத்தில் காய்களைப் பாதுகாக்க நூதன முறை திருப்பூர் விவசாயி கண்டுபிடிப்பு

திருப்பூர், மே 18-

தென்னை மரத்தில் தேங் காய்களை எலி, அணில் உள் ளிட்ட விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பதற்கு எளி மையான, நூதன பாது காப்பு முறையை திருப்பூர் விவசாயி ஏற்படுத்தி உள் ளார். இது சமூக வலை தளங்களில் பகிரப்பட்டு பல ரது வரவேற்பைப் பெற்று வருகிறது.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. குறிப்பாக பிஏபி பாசனப் பகு திகளின் பிரதான சாகுபடிப் பயிராக தென்னை உள் ளது. எனினும் கடந்த 20 ஆண்டு காலமாக பல்வேறு பிரச்சனைகளால் தென்னை  சாகுபடி நல்ல லாபம் தரும் நிலை சரிவடைந்து வருகி றது. இந்த வட்டாரத்தில் 1  கோடி தென்னை மரங்கள் வளர்க்கப்பட்டு வந்தன. எனி னும் இருபது ஆண்டுக ளுக்கு முன்பு ஈரியோபைட் எனப்படும் சிலந்திப் பூச்சி தாக்குதலால் தென்னங் குருத்துகள் சுருங்கிப் போய் விளைச்சல் கடுமையாக குறைந்து போனது. அதைத் தொடர்ந்து வண்டுப்பூச்சி தாக்குதல் ஏற்பட்டது, ஒரு கட்டத்தில் கடுமையான வறட்சி காரணமாக ஆயிரக் கணக்கான தென்னை மரங் கள் உயிர்த்தண்ணீர் கூடக் கிடைக்காமல் இற்றுப் போயின. இப்படி பல்வேறு பிரச்சனைகளை சமாளித்து தாக்குப்பிடித்து தென்னை சாகுபடி நடைபெற்று வருகி றது.

இது போன்ற பிரச்சனை கள் தவிர எப்போதும் தொந்த ரவு தரக்கூடிய விசயமாக எலி, அணில்கள் தொல்லை உள்ளது. தென்னை மரங்களில் குரும்பை காய் பிடிக்கும் சம யத்தில் எலி, அணில்கள் அவற்றை கடித்து, உட் கொண்டு நாசம் செய்வது வாடிக்கையாக உள்ளது. எனவே எலி, அணில்களிடம் இருந்து மரத்தில் விளையும் தேங்காய்களை காப்பாற்ற தென்னை மரங்களுக்கு அலு மினியத்தில் வளையம் அணி விக்கும் முறையை திருப்பூர் மாணிக்காபுரம் விவசாயி பாலசுப்பிரமணியம் கண்ட றிந்துள்ளார். எலி, அணில்கள் குரும்பைகளைக் கடித்து சேதப்படுத்துவதால் மரத்தில் தேங்காய் காய் பிடிக்காமல் போய்விடும். இப்பிரச்ச னைக்குத் தீர்வு காணும் பொருட்டு, தென்னை மரங்க ளில் நிலத்தில் இருந்து குறிப் பிட்ட உயரத்துக்கு மேல் இரண்டு அடி உயரத்துக்கு அலுமினியப் பட்டை வளை யத்தை சுற்றி பொருத்தி உள் ளார். இவ்வாறு தோப்பில் உள்ள அனைத்து மரங்களி லும் அலுமினியப் பட்டை வளையம் பொருத்தப்பட் டுள்ளது. இதனால் மரத்தில் ஏறும் மர எலி, அணில் போன்ற விலங்குகளுக்கு வழுவழுப் பான அலுமினியப் பட்டை யில் கால் பிடிமானம் கிடைக் காமல், மேலே ஏறிச் செல்ல முடியாமல் போய்விடும்.

இதனால் மரத்தில் குரும்பை கள் காய் பிடிப்பது பாதுகாக் கப்படுகிறது. இந்த பாது காப்பு ஏற்பாட்டை பொருத் திய பிறகு மர எலி, அணில் களால் எந்த பாதிப்பும் இல்லா மல் தேங்காய்கள் பாதுகாக் கப்பட்டுள்ளது. இந்த புதுமை யான மற்றும் எளிமையான அனுபவம் விவசாயிகள் மத் தியில் சமூக வளைதளங்க ளில் பகிரப்பட்டு வரவேற் பைப் பெற்று வருகிறது.

;