districts

img

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது பொய் வழக்கு: தள்ளுபடி செய்ய மாநகர காவல் ஆணையரிடம் அனைத்துக் கட்சியினர் மனு

திருப்பூர், ஜன. 19 - குடியுரிமைத் திருத்தச் சட்டத் துக்கு எதிராகப் போராடியவர்கள் மீது திருப்பூர் தெற்கு காவல் நிலைய அதிகாரிகளின் பதிந்த பொய் வழக்கு மற்றும் மனித உரிமை மீறலை கைவிடக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் அனைத்துக் கட்சியினர் மனு அளித்தனர். இதுதொடர்பாக, திமுக மத்திய மாவட்டப் பொறுப்பாளர் க.செல்வ ராஜ், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட் டச் செயலாளர் செ.முத்துக்கண் ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணைச் செயலாளர் எஸ்.ரவிச்சந்தி ரன், காங்கிரஸ் துணைத் தலைவர் வி.ஆர்.ஈஸ்வரன், மதிமுக மாநகரச் செயலாளர் சு.சிவபாலன், கொமதேக நிர்வாகி தம்பி வெங்க டாசலம், விசிக மாவட்டச் செயலா ளர் தமிழ்வேந்தன், முஸ்லீம் லீக் மாவட்டத் தலைவர் என்.சையது முஸ்தபா, மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி ஏ.பாபுஜி மற்றும் இஸ்லா மிய ஜமாத் கூட்டமைப்பு நிர்வாகி கள் உள்ளிட்டோர் செவ்வாயன்று திருப்பூர் மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு கொண்டு வந் துள்ள குடியுரிமைத் திருத்த சட்டத் திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக திருப்பூரிலும் காவல் துறை அனுமதி பெற்று அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு, திருப்பூர் ஷாகின் பாத் கூட்டமைப்பு, சிறுபான்மை மக்கள், ஜனநாயக இயக்கங்கள் மற்றும் இதர பகுதியினரால் அரசி யல் சட்டம் அனுமதித்த முறையில் அமைதி வழியில் போராட்டங்க ளும், இயக்கங்களும் நடைபெற் றன. இந்த போராட்டங்களினால் பொதுமக்களுக்கும், அரசின் செயல் பாடுகளுக்கும் எந்த தொந்தரவும், இடையூறும் இல்லாமல் நடைபெற் றது. நாடு முழுவதும் கோவிட் 19 தொற்று பரவியதை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற அறிவு றுத்தலின்படி போராட்டங்கள் கைவிடப்பட்டது. மேற்படி போராட் டத்தை ஒட்டி மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் நிஷாபானு மீதான குற்றப்பத்திரிகையை தள்ளு படி செய்ததுடன் உரிமைக்காக போராடும்போது எதற்கு எப்ஐஆர் என்று நீதிபதிகள் கேள்வி கேட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

இந்நிலையில்  போராட்டத்தில் பங்கேற்ற அமைப்பினர் மீது திருப் பூர் தெற்கு காவல் நிலையத்தில் கால தாமதமாக பழிவாங்கும் நோக்கு டன் அரசியல் காரணங்களுக்காக பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. வழக்கு எண்கள்: கு.எண் 16/20, 143/20, 152/20, 155/20, 158/20, 168/20 மற்றும் 181/20 ஆகிய குற்ற எண்களில் 143, 341 ஆகிய பிரிவுக ளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. இவ்வழக்குகளில் சம் பந்தப்படாத நபர்களும் சேர்க்கப் பட்டுள்ளனர். மேலும் வழக்கில் சேர்க்கப்பட்ட நபர்களுக்கு தகவல் தராமல் தலைமறைவு எதிரிகள் என்று உண்மைக்கு புறம்பாக குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது மட்டு மின்றி திருப்பூர் மாநகரப் பகுதி களில் உள்ள சிறுபான்மை மக்கள் மீது இ.த.ச பிரிவுகள் 505(1)பி, 505 (2) ஆர்/டபிள்யூ, டிஎன்பிபிடி சட்டப் பிரிவில் வழக்கு தாக்கல் செய்யப் பட்டு அவர்களின் வீடுகளுக்கு இரவு நேரங்களில் சென்று வீடுகளில் உள்ள பெண்கள் உள்ளிட்டவர் களை அச்சுறுத்தி வருகின்றனர். மேலும், மனித உரிமை மீறல் செயல் களிலும் ஈடுபடுகின்றனர்.

மேலும் எந்த முகாந்திரமும் இல்லாமல் குற்ற வியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 110ன் கீழ் ஜனநாயக இயக்கங்க ளின் முன்னணி செயல்பாட்டா ளர்கள் மீது வழக்கு பதிவு செய்து குற் றத்தை ஒப்புக் கொள்ள வலியுறுத்து கின்றனர். எனவே, மாநகர காவல் ஆணை யர் தலையிட்டு மேற்படி குற்ற எண் களிலான வழக்குகளில் மேல் நடவ டிக்கை எடுக்காமல் தள்ளுபடி செய்ய தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தெற்கு காவல் நிலைய அதிகாரிகளின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை தவிர்க்க தக்க தலையீடு செய்ய வேண்டு மென கேட்டுக் கொள்வதாக கூறப் பட்டுள்ளது.  முன்னதாக, திமுக அலுவலகத் தில் அனைத்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

;