districts

ஐந்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

திருப்பூர், ஏப்.16- திருப்பூர் மாநகராட்சி 16 மற்றும் 17 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் குடி நீர் பற்றாக்குறையை போக்க ஐந்து நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநி யோகம் செய்யும் படி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. திருப்பூர் மாநகராட்சி 16 மற்றும் 17  ஆவது வார்டுக்கு உட்பட்ட பாண்டியன் நகர் பிரதான வீதி, ஜெயலட்சுமி நகர், நல்லப்பா நகர், டீச்சர்ஸ் காலனி, கருப்ப ராயன் கோவில் வடக்கு வீதி,  ஆர்எஸ் புரம் பகுதி,  சவுண்டம்மன் கோவில் பகுதி ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீராக வருவதில்லை. பதினைந்து நாட்க ளுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநி யோகம் நடைபெறுகிறது .

இதனால், கோடை காலத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிற அளவிற்கு குடிநீர் விநியோகத்தை ஐந்து நாட்க ளுக்கு ஒருமுறை விநியோகம் செய்திட வேண்டும் என வலியுறுத்தி வியாழ னன்று மாநகராட்சி இரண்டாவது மண்ட லம் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி பாண்டியன் நகர் கிளை செயலாளர் ஜி.செல்வராஜ் தலைமை யில் மனு கொடுக்கும் நிகழ்வு நடை பெற்றது. இந்நிகழ்வில், திருப்பூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.பழனிச்சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே.மாரப் பன், ஆ.சிகாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

;