districts

img

சாலை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி காங்கேயம் நகராட்சி அலுவலகம் முற்றுகை

திருப்பூர், ஏப்.16- காங்கேயம் நகராட்சி பகுதியில் தனியார் ஆக்கிர மித்துள்ள நகராட்சி சாலையை மீட்டு தரக்கோரி, பொதுமக்கள் காங்கேயம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட கார்த் திகை நகர் பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் நகராட்சி சாலையை ஆக்கிரமித்து கார் ஷெட் அமைத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நகராட்சி நிர் வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட 15க்கும் மேற்பட்டோர் காங்கேயம் நகராட்சி அலுவலகத்தை வியாழன்று காலை 11 மணியள வில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, நகராட்சி பொறியாளர் சரவணன், வரு வாய் ஆய்வாளர் செல்வக்குமார், காங்கேயம் காவல் துறை யினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்ட இடத்தில் அளவீடு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில்  சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

;