districts

ரூ 17 93 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி, ஏப்.22-

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற் பனை சங்கத்தில் புதனன்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.17 லட்சத்து 93 ஆயிரத்துக்கு பருத்தி ஏல வர்த்தகம் நடை பெற்றது.  இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்திற்கு, மொத்தம் 905 பருத்தி மூட்டைகள் வந்திருந்தன.

இதில், ஆர்.சி.எச். ரகப்ப ருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 6, 000 முதல் ரூ.7, 400 வரை யிலும், டி.சி.எச் ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு  ரூ.7,500 முதல் ரூ.9,200 வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1,500 முதல் ரூ.3,000 வரை யிலும் ஏலம் போனது.  பருத்தி ஏல மையத்தில் மொத்தம் ரூ.17லட்சத்து 93ஆயிரத்துக்கு பருத்தி ஏல வர்த்தகம் நடை பெற்றது.  இந்த ஏலத்தில், 235 பருத்தி விவசாயிகளும், கோவை, ஈரோடு பகுதியிலிருந்து  12 பருத்தி வியாபாரிகளும் ஏலத்தில் பங்கேற்றனர்.

;