districts

img

திருப்பூரில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற மக்கள்

திருப்பூர், ஏப்.16- திருப்பூரில் அரசு மற்றும் தனி யார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதால், தடுப்பூசி போட ஆர்வத்துடன் வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும் பிச் சென்றனர். மத்திய, மாநில அரசுகள் அறிவித் தது முதற்கொண்டு திருப்பூரில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனை, நகர்நல மையங்கள், ஆரம்ப சுகாதார நிலை யங்கள் உள்ளிட்ட இடங்களில் இந்த தடுப்பூசி பொதுமக்களுக்கு இலவசமாக செலுத்தப்படுகிறது. இது தவிர தனியார் மருத்துவமனைக ளிலும் ரூ.250 கட்டண அடிப்படையில் கொரோனா தடுப்பூசி விருப்பப்பட்டு வருவோருக்கு செலுத்தப்படுகிறது.

துவக்க நாட்களில் தடுப்பூசி செலுத்து வது பற்றி பல்வேறு விதமான எதிர் மறையான கருத்துக்கள் சமூக வலை தளங்களில் உலவி வந்த நிலையில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள பொது மக்கள் பெரிதாக ஆர்வம் காட்ட வில்லை. எனினும் கொரோனா நோய் பரவல் மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் ஒரு பகுதியினரிடம்  தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்பட இந்த மாவட் டத்தின் பல்வேறு கிராமப்புறப் பகுதி களில் உள்ள அரசு சுகாதார நிலை யங்கள் மற்றும் அரசு தாலுக்கா மருத் துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத் திருந்து கொரோனா தடுப்பூசி செலுத் திக் கொள்கின்றனர்.  இந்நிலையில், வெள்ளியன்று திருப்பூர் நகரில் அரசு சுகாதார மையங்களிலும், தனியார் மருத்து வமனைகளிலும் கொரோனா தடுப் பூசி செலுத்திக் கொள்ள ஆதார் கார்டு கள் உடன் ஆவலாக வந்தனர். ஆனால், தடுப்பூசி இருப்பு இல்லாத தால் பின்னர் வரும்படி அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

எனவே, பொதுமக்கள் குறிப்பாக முதியவர் கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற னர். இதுபற்றி நகர்நல மையங்களி லும், தனியார் மருத்துவமனைகளி லும் விசாரித்தபோது போதுமான தடுப்பூசி இருப்பு இல்லை என்று தெரி விக்கப்பட்டது. மாவட்ட சுகாதார பணி கள் துணை இயக்குனர் டாக்டர் ஜெக தீஷ் குமாரிடம் கேட்ட போது, தற் போது 5000 தடுப்பூசிகள் மட்டுமே உள் ளது. கூடுதல் தடுப்பூசிகள்  வந்து விடும். அவை வந்தவுடன் தடுப்பூசி போடும் பணி தொடரும் என்று தெரி வித்தார். எனினும் எவ்வளவு தடுப்பூசி கள் வர உள்ளது என்று கேட்டதற்கு தெரியாது என்று அவர் பதில் கூறி னார்.

;