districts

இன்சூரன்ஸ் திட்டத்தை செயல்படுத்த சிஐடியு கோரிக்கை

அவிநாசி, ஜூலை 23- விசைத்தறி தொழிலாளர்களுக்கான நிறுத்தப்பட்டுள்ள இன்சூரன்ஸ் திட்டத்தையும், கல்வி உதவித்தொகை திட்டத் தையும் செயல்படுத்தக் கோரி சிஐடியு திருப்பூர் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சிஐடியு திருப்பூர் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கே.வேலுசாமி, மாவட் டச் செயலாளர் பி.முத்துசாமி ஆகியோர் மாவட்ட ஜவுளித் துறை ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள் ளதாவது, திருப்பூர், கோவை, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான விசைத்தறி தொழி லாளர்கள் உள்ளனர். மேலும், விசைத்தறி தொழிலாளர்கள் மற் றும் சைசிங், வைண்டிங் உட்பட அனைத்து தொழிலாளர்களுக் கும் குழு காப்பீடு திட்ட இன்சுரன்ஸ் முறையில், ஒன்றிய ஜவுளித் துறை லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்த இன்ஷூரன்ஸ் திட்டத்தின் மூலம் விபத்து, இறப்பு காலங்களில் தொழிலாளர் அனைவருக்கும் கிடைக்கும் உதவி தொகையால், நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் பயனடைந்துள்ளனர். மேலும்  தொழிலாளர் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி  உதவித்தொகையால், குழந்தைகள் கல்வி உத்தரவாதப் படுத்தபட்டது. தற்போது இன்சூரன்ஸ் திட்டமும், கல்வி உதவித் தொகை யும் நிறுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டது. இத னால் தொழிலாளர்கள் பாதுகாப்பு, குழந்தைகள் கல்வி கேள் விக்குறி ஆக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மீண் டும் இன்சூரன்ஸ் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;