districts

img

வாவிபாளையத்தில் கேஸ் கசிந்து விபத்து தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு செய்முறை

திருப்பூர், ஏப்.16- திருப்பூர் அருகே வாவி பாளையத்தில் எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு  தீ விபத்து ஏற்பட்டது. உட னடியாக பொதுமக்கள் தீயை அணைத்த போதும் அச்ச  உணர்வு இருந்தது. அங்கு  வந்த தீயணைப்பு துறையி னர் தீ விபத்து ஏற்பட்டால் எப் படி சமாளித்து தப்பிப்பது என்று செய்முறை விளக்கம் அளித்தனர். திருப்பூர் மாவட்டம், நெருப்பெரிச்சல் அருகே வாவிபாளையம் பகுதியில் சதீஷ் குமார் என்பவர் வீட்டில் சமையல் எரிவாயு சிலிண் டர் டியூப் வெடித்து தீப்பற்றி யது.  உடனடியாக அக்கம் பக் கத்தினர் உதவியோடு தீ அணைக்கப்பட்டது.

இதற் கிடையில் திருப்பூர் தீய ணைப்பு நிலையத்திற்கு தக வல் கொடுக்கப்பட்டு தீய ணைப்பு வீரர்களும் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்தனர். பாரத் கேஸ் நிறுவனத் திற்கு தகவல் கொடுக்கப் ்பட்டு எரிவாயு விநியோகம் செய்யும் முகவர் கார்த்திக் கும் அங்கு  வந்து சேர்ந்தார். விபரீதம் ஏதும் நடைபெறா மல் ஏற்கனவே தீயை அணைத்த போதிலும் பொது மக்களும், சம்பவம் நடந்த குடும்பத்தினர் ஒருவித அச்ச உணர்வோடும், பதட் டத்தோடும் இருந்தனர்.  

இந்நிலையில், தீய ணைப்பு அலுவலர் பி.முத்து கிருஷ்ணன் தலைமையி லான தீயணைப்பு படை வீரர் களும், பாரத்கேஸ் பகுதி விநி யோக முகவர் கார்த்திக்கும் பொதுமக்களுக்கு சமையல் எரிவாயு மூலம் தீ விபத்து ஏற்பட்டால், அதில் இருந்து பாதுகாப்பது, தீயை அணைப்பது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வினை தெளிவாக எடுத்துக் கூறினர். இந்த விழிப்புணர்வு நிகழ்வு அச்ச உணர்வோடும், பதட் டத்துடனும் இருந்த அப்பகுதி மக்களுக்கு விபத்துகளிலி ருந்து தப்பிப்பதற்கான தன் னம்பிக்கையை ஏற்படுத்தி யது.

;