districts

img

உயிரை காவுவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்திடுக நீட் தேர்வால் மகளை பறிகொடுத்த பெற்றோர் உருக்கம்

திருப்பூர், ஜூன் 22- ஏழை மாணவர்களின் உயிரை காவு வாங்கும் நீட்தேர்வை ரத்து செய்திடுக என நீட்தேர்வால் மகளை பறிகொடுத்த திருப்பூர் தம்பதியினர் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையி லான குழுவினருக்கு கடிதம் எழுதி யுள்ளனர். திருப்பூர் மாவட்டம், வெள்ளியங் காடு முத்தையன் கோயில் லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் பி.செல்வராஜ் -  எஸ்.ராஜலட்சுமி தம்பதியினர். இவர் களது மகள் ரிதுஸ்ரீ. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நீட் தேர்வு மன அழுத் தம் காரணமாக உயிரிழந்தார். இந் நிலையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க அமைக்கப்பட்டுள்ள நீதி பதி ஏ.கே.ராஜன் குழுவிற்கு செல்வ ராஜ் தம்பதி செவ்வாயன்று மின்னஞ்ச லில் கடிதம் அனுப்பி உள்ளனர். அதில் கூறியிருப்பதாவது, எங்களது ஒரே மகள் ரிதுஸ்ரீ, சிறு வயதில் இருந்தே மருத்துவராக வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடும், மிகுந்த ஆசை யோடும் வளர்ந்து வந்தார்.

நன்றாக படிக்கக்கூடிய மாணவியான ரிதுஸ்ரீ கடந்த 2019ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பில் 471 மதிப்பெண்கள் எடுத் தார். நீட் தேர்வையும் எதிர்கொண்டு எழுதினாள். ஆனால், மதிப்பெண் என்னவாக வருமோ, மருத்துவக் கனவு வீணாகப் போய்விடுமோ என்ற பயத்தில் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டார். எங் கள் குடும்பத்தில் முதல்முறையாக மருத்துவராகி இந்த சமுதாயத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்று சிறு  வயதில் இருந்தே எங்களிடம் கூறி வருவார். எங்கள் மகளின் எதிர்காலம் எங்கள் எதிர்காலம் என்று நம்பி இருந் தோம். ஆனால், அந்தக் கனவு நன வாகவில்லை. கிடைத்த கூலி வேலை செய்தால்தான் நாளை உணவிற்கு ஆதாரம் என்பதுதான் எங்கள் குடும் பத்தின் நிலை. இந்நிலையில், தனியார் நீட் பயிற்சி மையங்களில் சேர்ந்து படிப்ப தற்கு எங்களால் இயலாது.

எங்கள் ஏழை வீட்டு ஒற்றை செல்லப்பிள்ளை யைப் போல் பல எண்ணற்ற ஏழைப் பிள்ளைகள் மருத்துவர் கனவை சுமந்து கொண்டிருக்கிறார்கள். அவர் களாவது மருத்துவர்கள் ஆகி அவர் களின் மூலம் என் மகளின் கனவை நனவாக்குங்கள் என்று நீதிபதி ஏ.கே.ராஜன் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு மிகுந்த உருக்கத்துடன் கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளனர். உயி ரைக் காவு வாங்கும் நீட் தேர்வை ரத்து செய்து, பழைய முறையி னையே தொடர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

;