districts

img

பிஏபி தண்ணீர் முறையாக வழங்க வலியுறுத்தி காங்கயத்தில் விவசாயிகள் உண்ணாவிரதம், கடை அடைப்பு

திருப்பூர், ஜன.20- வெள்ளகோவில் பிஏபி கிளை வாய்க்காலில் முறையாக தண்ணீர் விட வலியுறுத்தி காங்கயத்தில் விவசாயி கள் உண்ணாவிரதம் மற்றும் கடைய டைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், வெள்ளக் கோவில் பிஏபி கிளை வாய்க்காலில் வரவேண்டிய தண்ணீரை பிஏபி நிர்வா கம் முறைகேடாகப் பயன்படுத்தி, பல ஆண்டுகளாக விவசாயிகளை வஞ் சித்து வருகிறது. இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும், பொதுப்பணித்துறை அலுவலகத்தி லும் முறையிட்டும், பல்வேறு போராட் டங்கள் நடைபெற்றும் இதுவரை பலன் எதுவும் இல்லை.

எனவே, பிஏபி பாசன தண்ணீர் முறைகேட்டில் ஈடுபடுப வர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, கடைமடைப் பகுதியான வெள்ளக் கோவில், காங்கயம் பகுதிகளுக்கு உரிய தண்ணீரை முறையாக வழங்கு வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி காங் கேயம் - கோவை சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு காங் கேயம் - வெள்ளகோவில் நீர் பாது காப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் வேலுச்சாமி தலைமையில் அப்பகுதி விவசாயிகள் உண்ணாவிரதப் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதில், 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்ட னர்.

கடை அடைப்பு

விவசாயிகளின் இந்தப் போராட்டத் திற்கு ஆதரவு தெரிவித்து, செவ்வா யன்று காங்கயத்தில் வியாபாரிகள் கடையடைப்பு போரட்டத்தில் ஈடு பட்டனர். இதன் காரணமாக, காங் கேயம் பகுதியில் திருப்பூர் சாலை, சென்னிமலை ரோடு, கரூர் சாலை, தாரா புரம் சாலை, கோவை சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உண வகங்கள், எலெக்ட்ரிக் கடைகள், ஜவு ளிக் கடைகள், தேநீர்க் கடைகள் உள் ளிட்ட பெரும்பாலான கடைகள் அடைக் கப்பட்டிருந்தன.

;