districts

பனியன் தொழிலாளர் சம்பள பேச்சுவார்த்தை சுமூக தொடக்கம்

திருப்பூர், ஆக.4- திருப்பூரில் பனியன் தொழிலாளர்க ளுக்கு சம்பள உயர்வு தரும் புதிய ஒப்பந் தத்திற்கு உற்பத்தியாளர்கள் சங்க நிர் வாகிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகி கள் இடையில் பேச்சுவார்த்தை சுமூக மாக தொடங்கியுள்ளது. திருப்பூரில் பனியன் தொழிலாளர்க ளுக்கு சம்பள உயர்வு வழங்குவது குறித்து குறிப்பிட்ட கால இடைவெளி யில் ஒப்பந்தம் நிறைவேற்றுவது வழக் கம். அதன்படி முந்தைய ஒப்பந்தம் நிறை வடைந்து ஏறத்தாழ ஒன்றரை வருடம் ஆகிறது. இந்நிலையில் புதிய சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து பின்னலாடை உற்பத்தியாளர் சங்கங்கள் சார்பில் புதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்து வதற்கு தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி ஆகஸ்ட் 4ஆம் தேதி புதனன்று திருப்பூ ரில் தென்னிந்திய பனியன் உற்பத்தியா ளர் சங்க அலுவலகத்தில் சம்பள ஒப் பந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் உற்பத்தியாளர் சங்கங்களின் பேச்சுவார்த்தை குழுத்தலைவர் பிரேம் துரை, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா எம் சண்முகம், சைமா  தலைவர் வைக்கிங் ஏசி ஈஸ்வரன், பொதுச் செயலாளர் பொன்னுச்சாமி, பீமா தலை வர் முத்து ரத்தினம், நிர்வாகி செந்தில் வேல் உள்பட முக்கிய உற்பத்தியாளர் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்ற னர். அதேபோல் தொழிற்சங்கங்கள் தரப் பில் சிஐடியு, ஏஐடியூசி, எல்பிஎப், ஐஎன் டியூசி, எச் எம்எஸ், ஏடிபி, எம்எல்எப் உள் ளிட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். பேச்சுவார்த்தைக்கு பின் இதுகுறித்து கூறிய சிஐடியு பனியன் சங்க பொதுச் செயலாளர் ஜி. சம்பத், “இன்றைய பேச்சு வார்த்தை சுமூகமாக நடைபெற்றது. எனி னும் சம்பள உயர்வு, பஞ்சப்படி உள் ளிட்ட கோரிக்கைகளில் உற்பத்தியாளர் சங்கங்கள் தெரிவித்திருப்பது போது மானதல்ல, எங்கள் கோரிக்கையின் மீது தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும்” என்று தெரி வித்தார்.

;