districts

அவிநாசி: மயக்க நிலையில் விடப்பட்ட சிறுமி உயிரிழப்பு

அவிநாசி, ஜன.5- அவிநாசி அருகே மயக்க நிலையில் சாலையில் கைவிடப் பட்டிருந்த சிறுமிக்கு தொடர்ந்து 10 நாட்களாக  சிகிச்சை அளித்து வந்த நிலையில் திங்களன்று பரிதாபமாக உயிரி ழந்தார். கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் ஷைலஜா குமாரி (39). மருத்துவரான இவர் தனது 5 வயது மகளான கய ராவை பெங்களூரில் இருந்து திருப்பூருக்கு கடந்த டிச.25ஆம் தேதியன்று பேருந்தில் அழைத்து வந்துள்ளார். இதன்பின் அவிநாசியை அடுத்த சேவூர், தண்டுக்காரம் பாளையம் - புளியம்பட்டி சாலையில் குப்பைகள் தரம் பிரிக் கும் கிடங்கு மையத்தில் தனது மகளுக்கு விஷம் கொடுத்து படுக்க வைத்துவிட்டு,  ஷைலஜாகுமாரியும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் மயக்க நிலையில் இருந்த சிறுமி கயரா மீட்கப்பட்டு அவிநாசி அரசு மருத்துவ மனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன்பின்னர், கோவை அரசு தலைமை மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் கண்விழிக்காமல் மயக்க நிலையிலேயே இருந்து வந்தார். இதைத்தொடர்ந்து கடந்த இரு நாள்க ளுக்கு முன்னர் தீவிர சிகிச்சைக்காக கோவை – அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமி கயாரா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந் நிலையில் திங்களன்று மாலை சிறுமி கயரா சிகிச்சை பல னின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவரது தாய் ஷைலஜா குமாரி கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

;