districts

img

விவசாயிகள் மீது தொடுக்கப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கைதான் வேளாண்மை சட்டங்கள்! திருப்பூரில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு

திருப்பூர், ஜன.24- மத்தியில் ஆளும் மோடி அரசு 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி தொழிலாளர், தொழில் துறை யினர் மீது தொடுத்த பண மதிப்பு நீக்கத் தாக்குதல் போல், விவசா யிகளின் மீது தொடுக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கை தான் மூன்று வேளாண் சட்டங் கள் என்று ராகுல்காந்தி குற்றஞ் சாட்டினார்.

 திருப்பூர் ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ’உழைப்பாளர் களின் உரிமையை மீட்போம்’ என்ற தலைப்பில் தொழிலாளர் கள், தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி சனிக் கிழமை நடைபெற்றது.  

திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலை வர் ஆர்.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தொழிலாளர்கள் எழுப்பிய கேள் விகளுக்கு பதில் அளித்து ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவில் அமைப்புசார்ந்த தொழில்களுக்கும், அமைப்பு சாரா தொழில்களுக்கும் பாரபட்சமான அணுகுமுறையை மத்திய அரசு கடைப்பிடிக்கிறது.

தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டம் கிராமப்புறத்தில் வறுமையில் வாழும் மக்களுக்கு குறைந்தபட்ச பணத்தை உத்தரவாதம் செய் கிறது. ஆனால் நகர்ப்புற ஏழை களுக்கு அத்தகைய திட்டம் இல்லை. எனவே நகரங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கும் கை களில் நேரடியாக குறைந்தபட்சப் பணம் கிடைக்கச் செய்யும் திட்டம் தேவை. காங்கிரஸ் ஆட்சி  அமைந்தால் அத்திட்டம் கொண்டு  வரப்படும்.  

பெண்கள் சமூகத்தில் சமமாக பாவிக்கப்பட வேண்டும். பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி ஆகியவற்றை அமலாக்கியதில், மோடி அரசு ஏதோ தெரியாமல் தவறு செய்துவிட்டதாக யாரும் நினைக்க வேண்டாம். நன்கு திட்டமிட்டு, தெளிவாக ஆலோ சனை நடத்தித்தான், கார்ப்பரேட் முதலாளிகள் பலனடைய வேண் டும் என்பதற்காக, தொழிலாளர் கள் மற்றும் சிறு, குறு நிறுவனங் களின் முதுகெலும்பை ஒடிக்க வேண்டும் என்று செய்த சதி செயல் இது. இந்தியாவின் பொருளாதாரம் படுபாதாளத்தில் உள்ளது.

இந்தி யாவில் உள்ள வங்கி பணத்தை எல்லாம் 10- 15 முதலாளிகளுக்கு கொடுத்துள்ளார். அவர்கள் திரும்ப செலுத்துவதில்லை. அந்த கடனையும் தள்ளுபடி செய் கிறார்கள். அதேசமயம் விவசா யிகள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு எளிமையாக கடன் கொடுப்பதும் இல்லை. பணக்காரர்களுக்கு கடன் தள்ளு படி செய்தால் பாரபட்சம் இல்லா மல் ஏழைகளுக்கும் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். ஆனால் கொடுத்த கடனையும் ஏழைகள் திரும்ப செலுத்த வேண் டும் என கட்டாயப்படுத்துகிறார் கள்.

இன்றைக்கு வறுமை இந்தியா மற்றும் பணக்கார இந் தியா என இரண்டு இந்தியா உள்ளது. அனைவரும் சமமாக  பாவிக்கப்பட வேண்டும். காங் கிரஸ் அரசு அமையும்போது, விவசாயிகள் மற்றும் தொழிலாளர் களுக்கு வேண்டியதை செய் வோம். அதில் ஓய்வூதியம் என்பது பெரும்பங்காக இருக்கும். ஒரே மொழி, ஒரே கலாச்சாரத்தை பிரதமர் முன்னிறுத்த முயல்கிறார். தமிழக அரசை கைக்குள் வைத்திருப்பதை போல, தமிழக மக்களையும் கைக்குள் வைக்க லாம் என நினைக்கிறார்கள். ஆனால், சுய மரியாதையை சார்ந்து இருப்பவர்கள் தமிழர் கள். நான் உங்களின் மனதின் குரலை  (மன்கீ பாத்) கேட்க வந் தேன். நான் என்னுடைய மனதின் குரலை பேச வரவில்லை.

உங்க ளின் குரலை என்றைக்காவது பிர தமர் மோடி கேட்டுள்ளாரா? சில பெரிய முதலாளிகளின் குரலை மட்டும் தான் அவர் கேட் பார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ஜி.எஸ்.டி. வரியைக் குறைத்து எளிமைப்படுத்தி மாற்றி அமைப்போம். ஜிஎஸ்டி போன்று கொள்ளையடிக்கும் வரிவிதிப்பை கொண்டு வரமாட் டோம்.  மேலும், மோடி அரசு 2016  ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி  தொழிலாளர், தொழில் துறையி னர் மீது தொடுத்த பண மதிப்பு  நீக்கத் தாக்குதல் போல், விவசாயி களின் மீது தொடுக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கை தான் மூன்று வேளாண் சட்டங்கள் என்றார் ராகுல்.  இதைத்தொடர்ந்து படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க காங்கிரஸ் என்ன திட்டம் வைத்துள்ளது,

கை விடப்பட்ட விழிம்பு நிலை மக்களுக்கு என்ன திட்டம், விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை, குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்டு தொழிலாளர் கள் ஏராளமான கேள்விகளை எழுப்பினர். அவற்றுக்கு ராகுல் பதில் கூறினார்.

இந்நிகழ்வில், தமிழக காங் கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, ஐஎன்டியுசி மாநில செயலாளர் ஜெகநாதன், எச்எம்எஸ் மாநிலச் செயலாளர் ராஜாமணி, எல்பிஎப் மாநில துணைத் தலைவர் கோவிந்தசாமி, சிஐடியு மாநில செயலாளர் கே.ரங்கராஜ், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், ஜெயக்குமார் எம்.பி., உள்ளிட்ட தலைவர்கள் உரை யாற்றினர்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் முன்னதாக கோவையில் இருந்து அவிநாசி வழியாக திருப் பூர் நோக்கி வரும்போது, அவிநாசிலிங்கம்பாளையம் பகுதி யில் தேநீர் கடையில் ராகுல் தேநீர் அருந்தினார்.  இதன்பின் அனுப்பர் பாளையத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசுகையில், தமிழகத்தில் வரக்கூடிய சட்டமன்றத் தேர்த லில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய  ஆட்சி அமையும் என்று நம் பிக்கை தெரிவித்தார். பின்னர் திருப்பூர் குமரன் பூங்காவில் உள்ள  தியாகி குமரன் சிலைக்கு மாலை  அணிவித்து மரியாதை செலுத்தி னார். 

;