districts

img

பாபநாசத்தில் சேதமடைந்த வி.ஏ.ஓ அலுவலகம்

பாபநாசம்,பிப்.8- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் கீழவீதியில் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு பொது மக்கள் வந்து செல்கின்றனர்.  இந்த அலுவலக கட்டடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. கட்டடத்தின் மேற்கூரை வழியே மழை நீர் கசி கின்றது.  இந்த அலுவலகத்தில்  கழிப்பறை வசதி இல்லாத காரணத்தால் பெண் வி.ஏ.ஓ க்களால் இங்கு  பணி செய்ய இயலாத நிலை உள்ளது. இந்த கட்டடத்தை இடித்து விட்டு கழிப்பறை வசதியுடன் தரமான முறையில் புதிய  அலுவலக கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.