districts

img

பீமா கோரேகான் சதிவழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்க!

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மனிதச் சங்கிலி இயக்கம்

தஞ்சாவூர், செப்.16 - மனித உரிமை செயல்பாட்டாளர்களை உபா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறை யிலடைத்து சித்ரவதை செய்து வரும் ஒன்றிய  பாஜக அரசைக் கண்டித்தும் பீமா கோரே கான் சதி வழக்கில் கைது செய்த போராளி களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாநி லம் தழுவிய ஆர்ப்பாட்டம் புதனன்று தஞ்சா வூர் ரயிலடி முன்பு மாவட்ட செயலாளர் கா. அபிமன்னன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாநிலக் குழு உறுப்பினர் என். சிவகுரு முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட் டத்தை மக்கள் அதிகாரம் மாநிலப் பொரு ளாளர் காளியப்பன் துவக்கி வைத்து பேசி னார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.பக்கிரிசாமி நிறை வுரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத்தில், சிபிஐ மாவட்டச் செய லாளர் முத்து, உத்திராபதி, சிபிஎம் மாநகரச் செயலாளர் என்.குருசாமி, மாதர் சங்க நிர்வாகி கள் தமிழ்செல்வி, மாலதி, தமுஎகச களப்பி ரன் உள்ளிட்டோர் உரையாற்றினர். 

பட்டுக்கோட்டை

புதுக்கோட்டை கீழராஜ வீதியிவ் நடை பெற்ற போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மு.மாதவன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர், ஏ.ஸ்ரீதர், சி.அன்புமணவாளன், எஸ்.டி.ஐ.பி. மாவட்டச் செயலாளர் காசிநாததுரை, ஆம் ஆத்மி மாவ ட்டச் செயலாளர் எம்.ஜாபர், விசிக நகரச் செய லாளர் அண்ணாத்துரை, மக்கள் ஜனநாயக கட்சி மாவட்டச் செயலாளர் யூசுப்ராஜா மற்றும்  பல்வேறு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். பெரம்பலூர் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி,  தமிழக மக்கள் ஒற்றுமை மேடை, சிறு பான்மை மற்றும் பெரியாரிய அம்பேத்கரிய ஒற்றுமை இயக்கங்கள் சார்பில் பெரம்ப லூர் புதிய பேருந்து நிலையம் முன்பு மனி தசங்கிலி போராட்டம் நடைபெற்றது. மக்கள் ஒற்றுமைமேடை ஒருங்கிணைப்பாளர் என். செல்லதுரை தலைமை வகித்தார். தீ.ஒ. முன்னணி மாநில துணைத்தலைவரும் எம்.எல்.ஏவுமாகிய எம்.சின்னத்துரை சிறப்பு ரையாற்றினார். சிபிஎம் அரியலூர் மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல் உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலை யம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒன்றியச் செய லாளர் எஸ்.பாலகிருஷ்ணன் தலைமை வகித் தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெய பால் உரையாற்றினார். 

கும்பகோணம்

கும்பகோணம் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  உள்ளிட்ட அனைத்துக் கட்சி சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. போராட்டத் தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னை.பாண்டியன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாகப்பட்டினம்

ராட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னனி  நாகை மாவட்டச் செயலாளர் ப.சுபாஷ் சந்திர  போஸ் தலைமை வகித்தார். சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினரும், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினருமான நாகைமாலி பீமா கோரே கான் சதி வழக்கு குறித்தும், மோடி அரசின்  மக்கள் விரோத போக்கையும் எடுத்துரைத்தார்.  ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்க மத்தியக் குழு உறுப்பினர் அமிர்தம், வி.தொ.ச மாவட்ட செயலாளர் எம்.முருகையன், மாதர் சங்க மாவ ட்டச் செயலாளர் டி.லதா, சிஐடியு மாவட்டச் செய லாளர் கே.தங்கமணி. தமுஎகச மாவட்டச் செய லாளர் ஆதி.உதயக்குமார் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். 

புதுக்கோட்டை 

;