districts

தென்னாப்பிரிக்காவில் பேச்சுத்தமிழ், தமிழ் அர்ச்சனைப் பயிற்சிப் படிப்புகள்

தஞ்சாவூர், ஆக.8 -  தென்னாப்பிரிக்காவில் லட்சக் கணக்கான தமிழர்கள் வாழ்ந்து வந்தாலும், அங்கே பேச்சு வழக்கில் தமிழ் புழங்காத நிலையே உள்ளது. இச்சூழலில் தமிழை மீட்டெடுக்கும் வகையில் அந் நாட்டில் உள்ள தென்னாப்பிரிக்கத் தமிழ் வர்த்தக சங்கம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்திலுள்ள தமிழ் வளர் மையத்துடன் புரிந்து ணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற் கொண்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வில் தென்னாப்பிரிக்கத் தமிழ் வர்த்தக சபைத் தலைவரான சிவப்பிரகாசன் பிரெகி பிள்ளை, தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் சி.தியாகராஜன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.  இதில், தென்னாப்பிரிக்காவில் தமிழ் அர்ச்சனைகளை செய்வ தற்கான சான்றிதழ் படிப்பு, பேச்சுத் தமிழ் பயிற்சிக்கான சான்றிதழ் படிப்புகளைத் தமிழ் வளர் மையம் மூலம் நடத்திடும் திட்டங்கள் இடம் பெற்றிருந்தன. இந்நிகழ்ச்சியில், இலங்கையில் உள்ள மலையகத் தமிழர் பகுதிக ளில் தமிழ்க்கல்வியை மையமிட்ட சான்றிதழ், பட்டயப்படிப்புகளை எஸ்.எஸ்.எம் கல்வி நிறுவனம் மூலமாக நேரடியாக நடத்திடுவ தற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தங்க ளுக்கான பாடத் திட்டங்களைத் தமிழ் வளர் மையத்தின் இயக்கு நர் முனைவர் இரா.குறிஞ்சி வேந்தன் வடிவமைத்து வருவதாகக் குறிப்பிட்ட தமிழ்ப் பல்கலைக்கழ கத் துணைவேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளுவன், பேச்சுத்தமிழை மீட்டெடுத்திடும் தென்னாப்பிரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் முயற்சிக்கு இப் படிப்புகள் பெரும் உதவி யினை நல்கும் என்று தெரிவித்தார்.  மேலும், இலங்கை மலைய கத் தமிழர்களுக்கு சிறப்பம்சங்களு டன் கூடிய வகையில் வேலை வாய்ப்புக்கு உதவும் வகையிலான படிப்புகளைத் தமிழ்ப் பல் கலைக்கழகத்தின் தமிழ் வளர் மையம் முன்னெடுக்கவும் இந்த ஒப்பந்தம் வழி வகை செய்வதாக துணைவேந்தர் குறிப்பிட்டார். தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் பதிவாளரும் பேராசிரி யருமான முனைவர் கு.வெ.பாலசுப்ரமணியன், இலங்கை எஸ்.எஸ்.எம் கல்வி நிறுவனச் செயலர்  கவாலியர் எஸ்.எஸ். மதிவாணன்,பேராசிரியர் மஞ்சுளா,  முனைவர் சங்கரராமன், முனைவர் ராஜா மற்றும் தமிழக அரசின் திட்டங்கள் பிரிவின் கண்காணிப்பா ளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இப்படிப்புகள் இருநாடுகளிலும் அடுத்த மாதம் முதல் தொடங்கப்பட உள்ளன.