districts

திருச்சி முக்கிய செய்திகள்

மாணவர் சங்க  உறுப்பினர் சேர்க்கை

திருச்சிராப்பள்ளி, ஜூலை 15- சுதந்திரப் போராட்ட தியாகியும் இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், தகைசால் தமிழர் தோழர்  சங்கரய்யா பிறந்த தின மான ஜூலை 15 ஆம்  நாளில், இந்திய மாணவர்  சங்கம் சார்பில் தமிழ்நாடு  முழுவதும் ஒரு லட்சம் உறுப்பினர் பதிவு துவங்கியது.

அதன் ஒரு பகுதியாக  உறுப்பினர் பதிவை திருச்சி உருமு தன லட்சுமி கல்லூரியில் மாவட்டத் தலைவர் சூரியா  துவக்கி வைத்தார். திருச்சி புறநகர் துவாக் குடி அரசு கலை கல்லூ ரியில் மாநில துணைச்  செயலாளர் ஜி.கே. மோகன், திருச்சிராப் பள்ளி அரசு சட்டக்கல்லூ ரியில் கிளைச் செய லாளர் அபிராமி, தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூ ரியில் மாநிலக் குழு உறுப்பினர் மாரியம்மாள் ஆகியோர் துவக்கி வைத்தனர். 

இதில் திருச்சி மாநகர்-புறநகர் மாவட்ட நிர்வாகிகள், மாவட்டத் தலைவர் வைரவளவன், மாவட்டச் செயலாளர் ஆமோஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஜூலை 19-இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

புதுக்கோட்டை, ஜூலை 15 - சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 19.7. 2024 அன்று புதுக் கோட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத் தில் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. 

இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்க ளுக்கு தேவையான நபர் களை தேர்வு செய்ய  உள்ளனர். எட்டாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளை ஞர்கள் தங்களது சுய விவர குறிப்பு, ஆதார்  அட்டை மற்றும் கல்விச் சான்று நகல்களுடன் கலந்து கொள்ளலாம்.

மேலும், வேலைநா டும் இளைஞர்கள் “தமிழ்நாடு தனியார்துறை  வேலை இணையம்” www.tnprivatejobs.tn. gov.in என்ற இணைய தளம் வாயிலாக பதிவு  செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறது என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா தெரிவித் துள்ளார்.