districts

img

சதுரங்கப் போட்டி ஸ்ரீவெங்கடேஸ்வரா பள்ளி மாணவர்கள் சாதனை

புதுக்கோட்டை, பிப்.14- மாநில அளவிலான சது ரங்கப் போட்டியில் புதுக் கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்.  மேல்நிலைப் பள்ளி மாண வர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்ட சதுரங்க சங்கம் மற்றும்  லயன்ஸ் கிளப் பட்டுக் கோட்டை இணைந்து மாண வர்களுக்கான மாநில அளவி லான சதுரங்கப் போட்டியை  நடத்தியது. இதில் வெங்க டேஸ்வரா மெட்ரிக். மேல் நிலைப் பள்ளி மாணவர் கே.லோகித் 6-க்கு 5 என்ற புள்ளிகள் பெற்று மாநில அளவில் வெற்றி பெற்று கோப்பையும் சான்றிதழும் பெற்றார். மேலும் புதுக்கோட்டை யில் மாஸ்டர் செஸ் அகா டமி நடத்திய மாநில அளவி லான சதுரங்கப் போட்டியில் பள்ளி மாணவர்கள் லோகித்  டாப் 20, குருநாத் டாப் 15,  நேத்ரா டாப் 11, கனிஷ்கா டாப் 10 ஆகிய தகுதிகளில் மாநில அளவில் வெற்றி பெற்று பரிசுகளும் சான்றி தழ்களும் பெற்றுள்ளனர்.  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி  முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.