கும்பகோணம், மார்ச் 9 - கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரி (தன்னாட்சி) தரமான கல்விச் சேவையில் கால் நூற்றாண்டு கடந்து வெள்ளி விழா கண்டு சாதனை படைத்துள்ளது. இதற்கான விழா மூன்று நாட்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கல்லூரிச் செயலர் அருட்சகோதரி அமலோற்பவ மேரி தலை மையுரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் அருட்சகோதரி யூஜின் அமலா கல்லூரியின் 25 ஆண்டுகால வளர்ச்சி-சாதனைகள் குறித்தும், ஆசிரியர்களின் பங்களிப்பு பற்றி யும்-தூய மரியன்னை சபை நம் நிறுவ னத்திற்கு ஆற்றிய பேருதவிகள் குறித்தும் உரையாற்றினார். முதல் நாள் சிறப்பு விருந்தினர்களாக தன்னம்பிக்கை பேச்சாளர் மற்றும் கல்வி உளவியலாளர் சரண்யா ஜெய்குமார், சமூக வலைதளங்களில் சிக்கிக் கொள்ளா மல் கைப்பேசியை கவனமாக கையாள வேண்டும் என்று மாணவிகளுக்கு உற்சாக மூட்டும் விதமாக சிறப்புரையாற்றினார். இரண்டாம் நாள் நிகழ்வில் திரைக்கலை ஞர் பாலா, மாணவிகள் அனைவரும் பெற் றோரை மதித்து கல்வியில் முன்னேற வேண்டும் என அறிவுறுத்தினார். மூன்றாம் நாளன்று, வெள்ளி விழாவும் மகளிர் தினமும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டு, ‘கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரி தரணி போற்றும் கல்லூரியாகத் திகழ்கிறது’ என்று கல்லூரியைப் புகழ்ந்து பேசினார். கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன், தஞ்சை மண்டல கல்வி இணை இயக்குநர் ரோசி, கும்பகோணம் ஆயர் ஜீவானந்தம், கனடா ஆயர் வெயின் லாப்சிங்கர், கும்பகோணம் மறைமாவட்ட முதன்மை குரு பேரருட்தந்தை எம்.பிலோ மின் தாஸ், கும்பகோணம் மறைவட்ட அருட்தந்தை காஸ்மன் ஆரோக்கியராஜ், அனைத்துக் கட்சித் தலைவர்களும், அரசு அலுவலர்களும், மும்மதத் தலைவர்களும் வாழ்த்திப் பேசினர். எதிர்காலச் சிந்தனை, உயர்ந்த எண்ணம், புதுமை செய் என்னும் மூன்று பொருண்மை யில் மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சி கள் நடைபெற்றன.