விருதுநகர், ஜன.1- தமிழக அரசு, ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள 109 மாத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். ஓய்வு பெறும் நாளில் தொழிலா ளர்களுக்கு பணப்பலன் களை வழங்க வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பணியின் போது உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசு களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ் நாடு ஓய்வு பெற்ற போக்கு வரத்து தொழிலாளர்கள் நல அமைப்பின் சார்பில் வாயில் கருப்புத் துணி கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகரில் போக்கு வரத்துக் கழக பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு மண்டலத் தலைவர் ஜி.வேலுச்சாமி தலைமை தாங்கினார். சிஐ டியு மண்டல பொதுச் செய லாளர் எம்.வெள்ளைத்துரை ஆதரித்துப் பேசினார். முடி வில் மாவட்டச் செயலாளர் போஸ் கண்டன உரையாற்றி னார். மேலும் இதில் மண்டல நிர்வாகிகள் காத்தப்பன், தமிழ்செல்வராஜ், மோகன் ராஜ் உள்ளிட்ட ஏராளமா னோர் பங்கேற்றனர்.