districts

img

திருமண உதவி திட்டத்தை மீண்டும் அமல்படுத்துக! மாதர் சங்க மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, ஆக.6 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க திருச்சி மாநகர் மாவட்ட 16-வது மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலை யம் அருகில் சனிக்கிழமை நடைபெற் றது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் ரேணுகா, மாவட்ட நிர்வாகிகள் புவ னேஸ்வரி, செபஸ்டின் பிரியா ஆகியோர்  தலைமை வகித்தனர். மாநாட்டு கொடியை மாவட்ட துணைத்தலைவர் நிர்மலா ஏற்றினார். மாவட்ட துணை செயலாளர் கவிதா வரவேற்றார்.  மாநிலத் தலைவர் வாலண்டினா துவக்க உரையாற்றினார். வேலை அறிக்கையை மாவட்ட செயலாளர் சரஸ்வதி வாசித்தார். வரவு-செலவு அறிக்கையை மாவட்ட பொருளாளர் நஜ்முநிஷா சமர்ப்பித்தார். பாரதி தாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறை மணிமேகலை, சங்க மாநில செய லாளர் தமிழ்செல்வி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாண வர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகப் படுத்தும் வகையில் கவுன்சிலிங் அமைத்து, சிறப்பு நிபுணத்துவம் பெற்ற வர்களை கவுன்சிலிங் அமைப்பிற்குள் கொண்டு வரவேண்டும். திருச்சி அரசு  மருத்துவமனையில் உள்ள மருத்துவர், செவிலியர் மற்றும் ஊழியர்கள் காலிப்  பணியிடங்களை நிரப்பி பொதுமக்க ளுக்கு மேம்படுத்தப்பட்ட நவீன மருத்து வத்தை வழங்க வேண்டும்.  மத்திய பேருந்து நிலையத்தில் தனி யார் பேருந்துகள் பொதுமக்களுக்கு இடையூறாக போக்குவரத்து நெரிசல் உண்டாக்குவதை தவிர்க்க உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

வேலை வாய்ப்பு மற்றும் அரசு சார்ந்த நிர்வாக  பொறுப்புகளில் பெண்களுக்கு கட்டாய மாக 33 சதவீத இடஒதுக்கீட்டை முழுமை யாக அமல்படுத்த வேண்டும். மாவட்ட சமூகநல அலுவலகத்தின் மூலம், குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள மனுக்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும்.  திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு மற்றும் சமூக பாதுகாப்பு அளித்திட வேண்டும். குழந்தைகள் மீதான வன்முறையை கல்வி நிலையங் களில் தடுக்கும் பொருட்டு புகார் பெட்டி கள் வைக்க வேண்டும். ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டத்தை  மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத் தலைவராக கே.பொன் மகள், மாவட்டச் செயலாளராக எஸ்.சரஸ்வதி, மாவட்டப் பொருளாளராக ராகிலா, மாவட்ட துணைத் தலைவ ராக எஸ்.ரேணுகா, மாவட்ட துணைச் செயலாளராக எஸ். நஜ்முநிஷா உள்பட 15 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு  செய்யப்பட்டது. மாநில துணைச் செய லாளர் கீதா நிறைவுரையாற்றினார்.   முன்னதாக மூத்த தோழர் தன லெட்சுமி அம்மாள் கௌரவிக்கப் பட்டார். வரவேற்புகுழு தலைவர் வள்ளி  நன்றி கூறினார்.

;