districts

திருச்சி முக்கிய செய்திகள்

குடிநீர் வழங்காததைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம்

புதுக்கோட்டை, ஜூன் 21 - புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கடந்த சில நாட்களாக குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ளது  அரையப்பட்டி கிராமம். இக்கிராமத்தில் உள்ள ஆதிதிரா விடர் குடியிருப்புக்கு கடந்த 5 நாட்களாக குடிநீர் வழங்கப் படவில்லை. உள்ளாட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தப் பயனும் இல்லை. மேலும், இடியுடன் கூடிய  மழையில் அறுந்து விழுந்த மின் கம்பிகள் நான்கு நாட்களாகியும் சரிசெய்யப்படாததால், அந்தப் பகுதி யில் மின் விநியோகமும் தடைபட்டு பொதுமக்கள் மிகுந்த  சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதனால், பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலிக் குடங்களுடன் ஆலங்குடியில் இருந்து அறந்தாங்கி செல்லும் பிரதான சாலையில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அதிகா ரிகள் வராததால், ஒன்றரை மணிநேரத்திற்கும் மேலாக  போராட்டம் நீடித்தது.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் வருவாயத்துறை அதிகாரிகள் போச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக குடிநீர் கிடைப்பதற்கும், மின்சா ரத்தை சரிசெய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என  உறுதியளித்ததைத் தொடர்ந்து கலைந்து சென்றனர்.

மாற்றுத்திறத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவர்கள் விருது பெறலாம்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 21- மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களைத் தேர்வு குழு மூலம் தேர்ந்தெடுத்து, தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு   தமிழக முதல்வர் மாநில விருது வழங்கி ஊக்குவித்து கௌரவிக்கப்படுகிறார்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திற னாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள், மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத் தும் பொருட்டு, சுதந்திர தின விழா அன்று விருதுகள் வழங்கப் படவுள்ளன.

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், ரூ.50,000 ரொக்கப் பரிசு மற்றும் சான்றி தழ், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், மற்றும் சான்றிதழ். மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிகள வில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்திற்கு 10  கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ். மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப்  பணியாளருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம்  மற்றும் சான்றிதழ். மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவில்  கடன் வழங்கிய சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும்  சான்றிதழ்.    

மேற்காணும் விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் விரு தாளர்கள் https://awards.tn.gov.in என்ற வலைதளத்தில்  குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களை பதிவு செய்தும், கோரப்பட்ட விவரங்களை இணைத்தும் 5.7.2024- க்குள் விண்ணப்பிக்கலாம். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. 

மேலும் தகவல்களுக்கு திருச்சிராப்பள்ளி கண்டோன் மென்ட் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக  பின்புறத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவ லகத்திலோ அல்லது அலுவலக தொலைப்பேசி எண்  0431-2412590 இல் தொடர்பு கொள்ளலாம் என திருச்சிராப் பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். 

கண்புரை பரிந்துரை முகாம்

பாபநாசம், ஜூன் 21 - பணிகள் துணை இயக்குநர் கலைவாணி உத்தர வின் பேரில், தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் மேம்படுத்தப் பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இலவச கண் புரை பரிந்துரை முகாம் நடந்தது. கண் மருத்துவ உதவியாளர் ரெங்கராஜ் கண் புரை முற்றிய நிலையில் இருந்த 18 பேரை தெரிவு செய்து, கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள, தஞ்சாவூரிலுள்ள மண்டல கண் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்தார். இதில் வட்டார மருத்துவ அலுவலர் தீபக், மருத்துவர்கள் பிரியங்கா,  ஹீரா, சண்முக வடிவு உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இதேபோன்று திருவையாறு அருகே திருவாலம் பொழில் அரசு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார  நிலையம் சார்பில் நடந்த முகாமில், 23 பேரை கண் மருத்துவ உதவியாளர் ரெங்க நாயகி தெரிவு செய்து தஞ்சா வூர் மண்டல கண் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்தார். இதில் வட்டார மருத்துவ அலுவலர் பிரபாகரன்,  மருத்துவர் பிரதீப் உட்பட பங்கேற்றனர்.

திருநங்கைகளுக்கான  சிறப்பு முகாம்

புதுக்கோட்டை, ஜூன் 21 - சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில்,  திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், “இம்முகாமில் திருநங்கைகள் தங்களுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு மற்றும்  ஆயுஷ்மான் பாரத் அட்டை போன்றவைகளை பதிவு செய்து பெற்றுக் கொண்டனர். திருநங்கைகளுக்கு ஊரக  சுய வேலை வாய்ப்பு பயிற்சிக்கான ஆலோசனையும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை தொடங்கு வதற்கான கடனுதவிகள் குறித்த ஆலோசனையும் வழங்கப்பட்டது. மேலும் 2 திருநங்கைகளுக்கு அடை யாள அட்டைகளும், 3 திருநங்கைகளுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளது” என்றார். 

மாவட்ட சமூகநல அலுவலர் க.ந.கோகுலப்பிரியா, முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத் திட்ட மாவட்ட திட்ட  அலுவலர் சு.ரவிசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சட்டவிரோத மது விற்பனையை தடுக்க நடவடிக்கை புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை, ஜூன் 21- சட்ட விரோதமாக மது விற்பனை மற்றும் மது அருந்து தலைத் தடுப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம் புதுக்கோட்டை  மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் வியா ழக்கிழமை நடைபெற்றது. 

பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், “கள்ளத்தனமாக மது விற்பனை செய்து பிடிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்த  ஒரே நபர் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார் எனக்  கண்டறியப்பட்டால் அவர் மீது குண்டர் சட்டப் பிரிவின்கீழ் வழக்குப் பதிந்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

பயன்பாடு இல்லாத அரசு கட்டிடங்கள், கைவிடப்பட்ட, இயங்காத குவாரிகளில் கள்ளத்தனமாக மது மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாடு செய்யப்படுவது குறித்தும் காவல்துறை திடீர் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதுதொடர்பாக அதிகளவில் வழக்குகள் பதிவு செய்யப் பட்ட கறம்பக்குடி, கந்தர்வகோட்டை, ஆலங்குடி மற்றும் காப்புக்காடுகள் உள்ள பகுதிகளில் தொடர் ஆய்வு செய்ய  வேண்டும். பெயிண்ட் மற்றும் வார்னிஷ் போன்ற பொருட்கள்  தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யப்படும் இடங்களில் மெத்த னால் போன்ற போதை உண்டாக்கக் கூடிய பொருட்கள் அதிக  அளவு கொள்முதல் அல்லது விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும்.

மருந்தகங்களில் அதிக போதையை உண்டாக்கக் கூடிய மாத்திரை, மருந்துகள், போதை ஊசி விற்பனை செய்யப் படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என காவல் துறையினருக்கும், அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், சட்ட விரோதமாக போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து 85310 85350 என்ற கட்செவி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்” என்றார்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) முருகே சன், இலுப்பூர் கோட்டாட்சியர் தெய்வநாயகி, இணை இயக்கு நர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) எஸ்.ஸ்ரீபிரியா,  தேன்மொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

100 நாள் வேலை கேட்டு  பருத்திச்சேரியில் சிபிஎம் மனு கொடுக்கும் போராட்டம்

கும்பகோணம், ஜூன் 21 - தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பருத்திச்சேரி ஊராட்சியில், ஆதி திராவிட வகுப்பு மற்றும் பிற்படுத்தப்பட்ட நடுத்தர வர்க்கத்தினர் ஏராளமானோர் குடும்பங்களாக வசித்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் செய்ய முடியாமல், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ் நூறு நாள் வேலைக்குச் சென்று தனது குடும்பங்களை கவனித்து வந்தனர். இதற்கிடையில், நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பையொட்டி, நூறு நாள் வேலை கடந்த 3 மாதங்களாக நிறுத்தப்பட்டது. இதனால் வருமானமின்றி, மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் சார்பில் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பருத்திச்சேரி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவரை சந்தித்து நூறு நாள் வேலை கேட்டு மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு பருத்திச்சேரி சிபிஎம் கிளைச் செயலாளர் வீரமணி தலைமை வகித்தார். மனு கொடுக்கும் போராட்டத்தில் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் பழனிவேல், விவசாயிகள் சங்க பொறுப்பாளர் ஜோசப் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஊராட்சி மன்றத் தலைவர் சேகர் மனுக்களை பெற்றுக்கொண்டு, அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.