தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரோட்டரி கிளப் சார்பில் பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஹேண்ட் பால், வாலிபால் விளையாடும் மாணவர்களுக்கு டி-ஷர்ட், சார்ட்ஸ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 25 மாணவர்களுக்கு டி-ஷர்ட், சார்ட்ஸை பாபநாசம் ரோட்டரி கிளப் தலைவர் சக்திவேல் வழங்கினார். செயலர் ரவி, முன்னாள் தலைவர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர் மணியரசன், உடற்கல்வி ஆசிரியர் செல்வக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.