districts

img

உதவிகள் கோரி கிழக்கு  சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜிடம் கோரிக்கை மனு

திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள ஏழை-எளிய மக்கள் பல்வேறு உதவிகள் கோரி கிழக்கு  சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். இந்நிலையில் திருச்சி மேலப்புலி வார்டு ரோட்டில் உள்ள தேவர் ஹாலில் கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.9 லட்சம் மதிப்பிலான  அயர்ன்பாக்ஸ், தையல் இயந்திரங்கள், தள்ளுவண்டி ஆகியவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் திவ்யா, மண்டலக்குழுத் தலைவர்கள் மதிவாணன்,  ஜெய நிர்மலா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.