districts

img

கோவில்ராமபுரம் – போழக்குடி வரை புதிய பேருந்து சேவை துவக்கம்

கும்பகோணம், மார்ச் 7- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் திருவிடைமருதூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவில்ராம புரம் – போழக்குடி  வரை பேருந்து சேவை நீட்டிப்பை தமிழக அரசின் தலைமை கொறடா  கோவி.செழியன் , நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ராமலிங்கம் ஆகியோர் கொடியசைத்து  துவக்கி வைத்தனர். முதலமைச்சர்  உத்தரவின்படியும்  போக்குவரத்துத்துறை அமைச்சர்  வழிகாட்டுதலின்படியும் திருவிடைமருதூர் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிராமபுரம் பேருந்து நிறுத்தத்திலி ருந்து கோவில்ராமபுரம் – போழக்குடி – கும்பகோணம் வரை பேருந்து சேவை நீட்டிக்கும் நிகழ்ச்சி கோவில்ராமபுரத்தில் நடைபெற்றது.