சென்னை, ஜூலை 31- நியூயார்க்கில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கும் யுனைட்டட் நேஷன்ஸ் குளோபல் காம்பாக்ட் அமைப்பின் இந்திய கிளையாக யுஎன் குளோபல் காம்பாக்ட் நெட்வொர்க் இந்தியா (UN GCNI) செயல்படுகிறது. லாப நோக்கற்ற சங்கமான இது, இந்தியாவின் முன்னணி வர்த்தக பெருநிறுவனங்களில் ஒன்றான ரீஃபெக்ஸ் , இயற்கை மறுசீரமைப்பில் வணிக தலைமைத்துவத்திற்கான மையத்தை சென்னை மாநகரில் தொடங்கியிருக்கிறது. உயிரினப் பன்மிய வளங்காப்பில் ஈடுபட்டுள்ள தொழில்முறை நிபுணர்கள் பெரிய வணிக நிறுவனங்கள், பிரதிநிதிகள், பள்ளிகள், சிந்தனை மையங்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் ஆகியவை இம்மையத்தின் தொடக்க நிகழ்ச்சியில பங்கேற்றன. தேசிய உயிரினப் பன்மிய ஆணையம் மற்றும் மாநில உயிரினப் பன்மிய வாரியங்கள் போன்ற அரசு நிறுவனங்களின் தீவிர ஒத்துழைப்பு மற்றும் ஆதரவின் மூலம், உயிரினப் பன்மியத்தை பேணி வளர்ப்பதற்கான நடவடிக்கைகளையும், கண்காணிப்பையும் மற்றும் தகவலளிப்பு செயல்பாடுகளையும் இம்மையம் மேம்படுத்தும்.