districts

img

உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு நாகைமாலி எம்எல்ஏ அஞ்சலி

நாகப்பட்டினம், ஜன.29 - நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் பிரதாப ராமபுரம் ஊராட்சியைச் சேர்ந்த மறைந்த வீரபாலன் உடலுக்கு கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி அஞ்சலி செலுத்தினார்.  வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரம் ஊராட்சி நடுத்தெருவைச் சேர்ந்த மனோகரன் மகன் வீர பாலன் (23) சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தார். அவருடைய ஆறு உறுப்புகள் தாயார் அனுமதியுடன் தானம்  செய்யப்பட்டது. வீரபாலனின் உடலில் இருந்து பெறப்பட்ட இதயம், சிறுநீரகம், கண், நுரையீரல், தோல் உள்ளிட்ட உறுப்புகள் மற்றவர்களுக்கு பொருத்தப்பட்டது.   வீரபாலனின் உடலுக்கு அரசு மரியாதையுடன் கீழ்வே ளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ், வருவாய் கோட்டாட்சியர் கோ. அரங்கநாதன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.  வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் டி.அருள்தாஸ், மாண வர் சங்க மாவட்டத் தலைவர் மு.ஜோதிபாசு, பிரதாபராம புரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆர்.வி.எஸ். சிவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.