பாபநாசம், நவ.19- அய்யம் பேட்டை - கணபதி அக்ரஹாரத்தை இணைக்கும் குடமுருட்டி ஆற்றுப் பாலம் 50 ஆண்டுகளைக் கடந்து, பழுதடைந்ததால், அதன் அருகிலேயே புதிய பாலம் கட்டுமானப் பணி நடந்து, இணைப்புச் சாலை பணி நடக்கா மல் உள்ளது. சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து, அவர்கள் கூறுகையில் குடமுருட்டி ஆற்றுப் பாலம் பழுதடைந்து, இடியும் நிலையில் இருந்தது. இந்தப் பாலம் குறுகியது என்பதால், வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் இருந்தது. இதன் அருகிலேயே புதிய பாலம் கட்டுமானம் தொடங்கி, இரண்டாண்டுகளைக் கடந்த நிலையில், தற்போது பாலம் கட்டுமானப் பணி நிறைவடைந் துள்ளது. இணைப்புச் சாலை பணி மட்டும் தொடங்காமல் உள்ளது. இதையும் விரைவில் முடித்து போக்குவரத்து இயல்பாகச் சென்று வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.