தஞ்சாவூர், ஆக.18 - நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கலந்தாய்வில் பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தஞ்சாவூரில், சனிக்கிழமை மாலை நடை பெற்ற மாநில செயற்குழுக் கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் க.முத்துகுமார் தலைமை வகித்தார். மண்டலச் செயலாளர் அறிவழகன் வரவேற்றார். பொதுச் செயலாளர் ஆ.ரங்க சாமி, முன்னாள் மாநிலத் தலைவர்கள் சக்தி வேல், தமிழ்மணி, மாவட்டத் தலைவர் முருகன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.கோதண்டபாணி ஆகி யோர் சிறப்புரையாற்றினர். நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றி வரும் அனைத்து நிலை ஊழியர்களுக்கும் முதுநிலைப் பட்டியலை உடனே வெளியிட வேண்டும். அனைத்து நிலை ஊழியர் களுக்கும் உடனடியாக காலதாமதமின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும். கோட்ட கணக் கர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியமும், அவர்கள் சொந்த தாலுகாவில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றும் அனைத்து நிலை ஊழியர்களுக்கும் கலந்தாய் வில் பணியிட மாறுதல் வழங்க வேண்டும். அரசு விடுமுறை நாட்களில் பணியாற்ற நிர்ப்பந்தம் செய்வதையும், ஆய்வுக் கூட்டங் கள் நடத்துவதையும் தவிர்க்க வேண்டும். கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரி காத்திருக்கும் அனைவருக்கும் உடனே பணி நியமனம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ கம் முழுவதும் செப்.9 ஆம் தேதி நெடுஞ்சா லைத்துறையின் அனைத்து கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட அலுவலகங்கள் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்ட துணைத் தலைவர் ஆர்.கீதா நன்றி தெரிவித்தார்.