அறந்தாங்கி, ஜூன் 6-
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசினர் பாலி டெக்னிக் கல்லூரியில் 2023-2024- ஆம் கல்வியாண்டிற்கான இரண்டாமாண்டு (நேரடி) சிவில், மெக்கானிக்கல், மின்னணுவியல் தொடர்பியல், கணினியியல் மற்றும் வணிகவியல் பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கூட்டம் ஜூன் 8, 9 தேதிகளில் கல்லூரியில் நடைபெறுகிறது.
விண்ணப்பித்த மாணவர்களின். மொபைல். எண்ணுக்கு தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. தகவல் கிடைக்கப் பெறாத மாணவர்கள் தங்களது மாற்றுச் சான்றி தழ், சாதிச் சான்றிதழ், 10, 11, 12- ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், ஜடிஜ மாணவர்கள் தங்களது என்சிவிடி சான்றிதழ், ஜடிஜமதிப்பெண் சான்றிதழ் அசல் ஐந்து செட், நகல், மூன்று புகைப்படம், சேர்க்கை பெறும் மாணவர்கள் சேர்க்கைக் கட்டணம் ரூ.2127, ஆகியவற்று டன் மேற்குறிப்பிட்ட நாட்களில் கலந்து கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.