districts

தமிழ்க் கடல் நெல்லைக் கண்ணன் மறைவு: பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா இரங்கல்

பாபநாசம், ஆக.19 - மனிதநேய மக்கள் கட்சியின் தலை வரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினரு மான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: தமிழறிஞரும், இலக்கியப் பேச்சாளரும், பட்டிமன்ற நடுவராகவும் பணிபுரிந்த தமிழ் கடல் என்று  போற்றப்பட்ட நெல்லை கண்ணன் வயது மூப்பு, உடல்நலக் குறை வினால் நம்மை விட்டு பிரிந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். பெருந்தலைவர் காமராசர், கண்ணதா சன் உள்ளிட்ட ஆளுமைகளுடன் நெருங்கிப்  பழகியவர். 1970 ஆம் ஆண்டு முதல் காங் கிரஸ் கட்சியில் பிரபல பேச்சாளராக விளங்கி யவர் நெல்லை கண்ணன். இலக்கியம் மட்டு மல்லாமல், ஆன்மீக சொற்பொழிவாளர் என  பன்முகம் கொண்டவர். பல்வேறு மேடை களில் இவரது தமிழ் கொடி கட்டி பறந்தது.  தொடர்ந்து மூன்று மணி நேரம் இடைவிடாது பேசும் ஆற்றல் மிக்கவர். சமீபத்தில் தமிழக  அரசின் இளங்கோவடிகள் விருதை பெற்ற வர்.  இஸ்லாமிய சமூகத்தின் மீது மிகுந்த பற்றும் பாசமும் கொண்டவர். சமூக நல்லி ணக்கத்தை வலியுறுத்தி பேசுவதில் மிகப் பெரிய அளவில் முனைப்பு காட்டியவர். ஒன்றிய அரசு கொண்டுவந்த குடியுரிமை  திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து தமிழ கத்தின் பல்வேறு மேடைகளில் முழங்கியவர். நெல்லை மேலப்பாளையத்தில் நடைபெற்ற  கூட்டத்தில் ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து பேசியதற்காக, தனது முதுமை வயதிலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்.  அவரது மறைவு தமிழ் இலக்கிய உல கிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.  அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தின ருக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் மனிதநேய  மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த அனு தாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;