districts

கராத்தே, வில்வித்தை போட்டியில் வென்ற மாணவர்களுக்கு வாழ்த்து

திருவாரூர், அக்.15 - திருவாரூர் மாவட்டத்தில் தி டைகர்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி உள்ளது. இந்தப் பயிற்சிப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் தேசிய அளவிலான கராத்தே பேட்டிகள், சோழமண்டல அளவிலான மற்றும் மாநில அளவிலான வில்வித்தை போட்டிகளில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள், பயிற்சியாளர் குணசேகரன் ஆகியோர் திருவாரூர் சுற்றுலா மாளிகையில், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த மாணவர்கள் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச கராத்தே போட்டியிலும், ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான வில்வித்தை போட்டியிலும் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.