districts

img

சேரன்குளம் அரசுப் பள்ளி முதலிடம்

மன்னார்குடி, மே 11 - திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் சேரன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி, திருவாரூர் மாவட்ட அளவில் 500 மதிப் பெண்களுக்கு 493 மதிப்பெண்கள் பெற்று  அரசுப் பள்ளி அளவில் முதலிடம் பெற்றுள்ளது. மன்னார்குடி அருகில் உள்ள நான் காம்சேத்தி கிராமத்தில் கம்பி பிட்டர் வேலை  செய்யும் வி.சுரேஷ் -எஸ்.கிருஷ்ணவேணி ஆகியோரின் மகள் எஸ்.கீர்த்தனா சேரன் குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம்  வகுப்பு படித்து வருகிறார். நடைபெற்ற அரசு  பொதுத் தேர்வில் 493 மதிப்பெண்கள் பெற்று திருவாரூர் மாவட்ட அளவில் முத லிடம் பெற்றுள்ளார். 15 மாணவ-மாணவியர் 400 மதிப்பெண் களுக்கு மேல் பெற்றுள்ளனர். 3 மாணவிகள் கணித பாடத்தில் முழு மதிப்பெண்ணும், சமூக அறிவியலில் 2 மாணவிகள் முழு மதிப் பெண்ணும் பெற்றுள்ளனர். 69 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 66 மாணவர்கள் தேர்ச்சி  பெற்று 96 சதவீதம் எடுத்து, சென்ற ஆண்டை விட அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.  சாதனை மாணவர்களை பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மேலாண்மைக் குழு நிர்வாகிகள், மன்னார்குடி நகர கல்வியாளர்கள் பாராட்டி  னர்.