districts

திருச்சி விரைவு செய்திகள்

காவல்துறையை கண்டித்து சிபிஎம் சார்பில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

பொன்னமராவதி, அக்.7- பொன்னமராவதி அருகே உள்ள காரையூரில் சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் பி.ராமசாமி உட்பட மூன்று பேர் மீது பொய் வழக்கு போட்ட காவல் துறை அதிகாரியை கண்டித்து அக்டோபர் 8 ஆம் தேதி  நடைபெறவிருந்த கண்டன  ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  பொன்னமராவதி தாலுகா மரவா மதுரை வட்டம் உடையாம்பட்டி கிராமத்தில் சுமார் 15 ஏக்கருக்கும் மேற்பட்ட அரசு புறம் போக்கு நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து வரும் உடையாம் பட்டியை சேர்ந்த பழனியாண்டி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஆக்கிரமிப்பை அகற்றிட வேண்டும்.  அரசு சொத்தைப் பாதுகாக்க போராடி வரும் சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் பி.ராமசாமி மற்றும் பி.பொன்னுச்சாமி, சி.பாண்டியன் மீது காரையூர் காவல் துறையினர் பொட்ட பொய் வழக்கை ரத்து  செய்ய வேண்டும் எனக் கோரியும், மக்க ளுக்காக போராடும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் மீது எந்தவிதமான விசா ரணையும் செய்யாமல் சட்டவிரோதமாக பொய் வழக்கு போட்ட காரையூர் காவல் துறை அதிகாரியை கண்டித்தும் அக்டோ பர் 8 அன்று சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருந்தது.  இந்நிலையில், அருள்மொழி, அரசு, ஒன்றியக் குழு உறுப்பினர் பி.ராமசாமி உள்ளிட்ட மூவர் மீது சட்டவிரோதமாக போடப்பட்ட வழக்கை ரத்து செய்வதாக இலுப்பூர் டிஎஸ்பி, உறுதி அளித்ததைய டுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

தடுப்பூசி முகாம்  ஆலோசனைக் கூட்டம் 

பட்டுக்கோட்டை, அக்.7- கொரோனா தடுப்பூசி 5 ஆம் கட்ட சிறப்பு முகாம் ஞாயிறன்று (அக்.10) நடைபெறவுள்ளது. இதையொட்டி பட்டுக்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில், சார் ஆட்சியர் பாலச்சந்தர் தலைமையில் கலந்தாலோசனை கூட்டம் வியாழனன்று நடைபெற்றது.  இதில், சார் ஆட்சியர் கூறுகையில், ‘‘இதுவரை தடுப்பூசி செலுத்தாத வர்கள், தடுப்பூசி செலுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதர வற்ற நிலையில் உள்ளவர்களுக்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட நூறு சதவீதம் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’. இவ்வாறு கூறினார்.

போலி ஏஜென்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  நீதிமன்ற உத்தரவின் பேரில் பணப்பட்டுவாடா

சிபிஎம் தலையீடு வெற்றி

திருவாரூர், அக்.7- போலி டிராவல் ஏஜென்சி மூலமாக வெளி நாட்டிற்கு அனுப்புவதாகக் கூறி ஏமாற் றப்பட்ட இளைஞர்களுக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் முதல் தவணை பணப் பட்டுவாடா  நடைபெற்றது.  சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கலைமணி நகர் அழகப்பாபுரத்தில் வசித்துவரும் முத்தழகு (52), மாதவி (46) என்ற தம்பதியர், டிராவல் ஏஜென்சி நடத்துவதாகக் கூறி பல இளைஞர்களிடம் லட்சக் கணக்கில் பணம் பெற்று ஏமாற்றி வந்தனர். வெளிநாடு செல்வதற்காக பணம் கொடுத்து ஏமாந்த இளை ஞர்கள் பல்வேறு காவல் நிலை யங்களில் புகார் அளித்தி ருந்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை இல்லாததால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தொடர்பு கொண்டு மனு அளித்தனர்.

சிபிஎம் தலையீடு

இதன் பேரில், கட்சியின் திரு வாரூர் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, சிவகங்கை மாவட்டச் செயலாளர் டி.வீர பாண்டியை தொடர்பு கொண்டு உதவிட கோரினார். இதனால், திருவாரூர் மனக்கால் அய்யம் பேட்டையில் வசித்து வரும் ஏமாற்றப்பட்ட டி.கதிவேல்(32) உள்ளிட்ட 5 இளைஞர்களை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் அழைத்துச் சென்று புகார் அளித்தார்.  திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் அளிக்கப்பட்டிருந்தது. தீக்கதிர் நாளிதழில் இதுகுறித்து இரண்டு முறை விரிவான செய்தி வெளி யாகி இருந்தது. ஏனைய செய்தி தொலைக்காட்சி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களிலும் வேகமாக பரவியது.

ஜாமீன் மறுப்பு

இந்நிலையில், குற்றம் சட்டப் பட்டிருந்த முத்தழகு, மாதவி, மாதவியின் சகோதரி தேவி, மாதவியின் இரு மகள்கள் பவித்தா (24), ரவீனா(21) ஆகி யோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கோரினர். ஆனால் ஜாமீன் மறுத்த நீதி மன்றம் ஆவணங்கள் அடிப்படை யில் இரண்டு தவணையாக ரூ.4,80 லட்சத்தை வரைவோலை யாக வழங்கிட உத்தரவிட்டது.  மேலும் காரைக்குடி அழ கப்பாபுரம் காவல் நிலையம் மூலமாக வரைவோலைகளை வழங்கிடவும் கோரியது. இதன் அடிப்படையில் அக்.6 ஆம் தேதி புதனன்று டி.கதிவேல் (32), ஜி.திருநாவுக்கரசு (33), கே.ராஜேஷ் கண்ணா (35), ஆர். அண்ணாமலை (35) ஆகியோ ருக்கு தலா ரூ.50 ஆயிரம் என  முதல் தவணையாக ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது.  மீதமுள்ள 2.80 லட்சம் ரூபாயை வரும் 20ஆம் தேதி வழங்கிட நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. ஏமாற்றப்பட்ட இளைஞர்களுக்கு நீதி கிடைப்ப தற்காக பிரதிபலன் எதிர்பாரா மல் உதவிய மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, தீக்கதிர் நாளிதழ் செய்தி ஊடகத்துறையினர், சிவ கங்கை மாவட்ட காவல்துறை மற்றும் நீதிபதிகளுக்கு சம்பந்தப்பட்ட இளைஞர்கள் உணர்ச்சிப் பெருக்குடன் நன்றி கோரினர்.

 

 

;