districts

ஏவிசி கல்லூரியில் பட்டம் பெற விண்ணப்பிக்க அழைப்பு

மயிலாடுதுறை, ஏப்.21 - மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் 2021 ஆம் ஆண்டு மற்றும் இதற்கு  முன்பு தேர்ச்சி பெற்ற இளங்கலை, இளம்அறிவியல் முதுகலை, முது அறிவியல் மற்றும் ஆய்வியல் நிறைஞர் மாணவ-மாணவிகள் பட்டம் பெறுவதற்கான விண்ணப்பங்களை கல்லூரி அலுவலகத்தில் அதற்குரிய தொகையை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். மே 7 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் காலை மற்றும் மாலை நேர கல்லூரி அலுவலகத்தில் கிடைக்கும் என கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர்.நாகராஜன் தெரிவித்தார்.