districts

img

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புத்தகக் கண்காட்சி

உலக புத்தக தினத்தையொட்டி கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள முத்தனூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பாரதி புத்தகலாயம், ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சி துவக்க விழாவிற்கு பள்ளி முதல்வர் கணேசன் தலைமை வகித்தார். வெற்றி விநாயகா மெட்ரிக் பள்ளியின் முதல்வர் பிரகாசம் புத்தக அரங்கை திறந்து வைத்து பேசினார்.