மயிலாடுதுறை, ஜூன் 23 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் லைட்ஸ் ஆஃப் விஸ்டம் அமைப்பு சார்பில் 10 ஆவது சர்வதேச யோகா தினம் ஞாயிறன்று கொண்டாடப் பட்டது. நிகழ்ச்சியை முனைவர்.செல்வம் வர வேற்று தொகுத்து வழங்கினார். பொறை யார் த.பே.மா.கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.ஜான்சன் ஜெயக்குமார், புதிய எருச லேம் ஆலய ஆயர் சாம்சன் மோசஸ், தொழி லதிபர் ஏ.கே.சந்துரு, கட்டிட ஒப்பந்தக்காரர் இளங்கோவன், லைட் ஆப் விஸ்டம் (காரைக்கால்) ஒருங்கிணைப்பாளர் கார்குழலி, அமைப்பாளர் சரவணன் ஆகி யோர் யோகா குறித்து உரையாற்றினர். தொடர்ந்து தரங்கம்பாடி, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், இளை ஞர்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் யோகாசனங்களை செய்தனர். அனைவருக் கும் இயற்கையான யோகா உணவு வழங்கப்பட்டது.