districts

img

அடையாள அட்டை வழங்கும் போதே நலவாரிய உறுப்பினர் பதிவையும் மேற்கொள்க! மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

தஞ்சாவூர், ஆக.16 -  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 4 ஆவது தஞ்சை மாவட்ட மாநாடு தஞ்சாவூர் லாலி  மஹாலில் ஆகஸ்ட் 14, 15 (ஞாயிறு,  திங்கள்) ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது.  ஞாயிற்றுக்கிழமை மாலை 4  மணிக்கு, தஞ்சை பழைய பேருந்து  நிலையம், அறிஞர் அண்ணா நூற்றாண்டு திடலில் இருந்து, மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற பேரணியை மாநில துணைத் தலை வர் டி.கணேசன் தொடங்கி வைத் தார்.  தொடர்ந்து, ஆபிரஹாம் பண்டி தர் சாலையில், மாவட்டச் செய லாளர் பி.எம். இளங்கோவன் தலை மையில் பொதுக்கூட்டம் நடைபெற் றது. மாவட்ட துணைச் செயலாளர் சி.ராஜன் வரவேற்றார். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், சங்கத்தின் மாநில துணை தலை வர் டி.கணேசன், தமிழ்நாடு அரசு  மாற்றுத்திறனாளிகள் துறை ஆலோ சனைக் குழு உறுப்பினர் டி. கஸ்தூரி, டி.வாசுதேவன் ஆகி யோர் சிறப்புரையாற்றினார்.
பிரதிநிதிகள் மாநாடு 
திங்கள்கிழமை நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டில், மாவட்ட  துணைத் தலைவர் பி.சங்கிலி முத்து சங்கக் கொடியை ஏற்றி  வைத்தார். மாநகரத் தலைவர் கே. குமார் அஞ்சலி தீர்மானம் வாசித் தார். மாநில துணைத்தலை வர் டி.கணேசன் துவக்கவுரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன் வேலை அறிக்கை வாசித்தார். மாவட்டப் பொருளாளர் எஸ்.சிவப்பிரியா வரவு செலவு அறிக்கை தாக்கல்  செய்தார். மீனாட்சி மருத்துவ மனை மருத்துவர் சரவணப்பெரு மாள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாவட்டத் தலைவர் பி.செந்தில் குமார், அரசு ஊழியர் சங்க மாநி லச் செயலாளர் கோதண்டபாணி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  மாவட்டத் தலைவராக டி.கஸ் தூரி, மாவட்டச் செயலாளராக பி.எம்.இளங்கோவன், மாவட்டப் பொருளாளராக கே.மோகன், துணைத் தலைவர்களாக பழ. அன்புமணி, வி.ரவி, என்.ஜெயபால  முருகன், மேனகா, துரையப்பன், துணைச் செயலாளர்களாக சி.ரா ஜன், ஜி.ராதிகா, சரவணன், சந்திர பிரகாஷ், சாமியப்பன் உள்ளிட்ட 29  பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு  செய்யப்பட்டது.
நிதியளிப்பு 
புதிய நிர்வாகிகளை வாழ்த்தி யும், மாநாட்டை நிறைவு செய்தும், மாநில பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் உரையாற்றினார். மாநில மைய நிதியாக ரூ.22,000 மாநில பொதுச் செயலாளர் நம்பு ராஜனிடம் வழங்கப்பட்டது.  நூறு நாள் வேலையை 150  நாட்களாக உயர்த்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் குடும்பத் திற்கு, எல்லா பொருள்களும் கிடைக் கும் வகையில் ஏஏஒய் - குடும்ப அட்டை வழங்க வேண்டும். உதவித் தொகையை ரூ.3,000 லிருந்து ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்க வேண் டும். வங்கிகளுக்கு கடன் கேட்டுச் செல்லும் மாற்றுத்திறனாளிகளை அலைய விடாமல் வங்கி நிர்வா கங்கள் கடன் வழங்க வேண்டும்.  மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் கொடுக்கப்படும் அனைத்து மனுக் களுக்கும் முறையே ஒப்புகை சீட்டு  வழங்க வேண்டும். மாற்றுத் திறனா ளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும்போதே, நலவாரிய உறுப் பினர் பதிவையும் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

;