districts

img

திருபுவனம்: திமுக வேட்பாளருக்கு சிபிஎம் வாக்கு சேகரிப்பு

கும்பகோணம், பிப்.17- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பேரூராட்சி 7வது வார்டில் திமுக கூட்டணி சார்பில் திமுக வேட்பா ளர் முருகன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக 7-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதி களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கூட்டணி கட்சியினர், மாதர் சங்கத்தினர் வாக்கு சேகரித்தனர். வேட்பாளர் முருகன் திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கத்தை உருவாக்கிய தலை வர்களில் ஒருவரும் நெசவாளர்களின் உரி மைக் குரலாய் களப் போராளியாக இருந்த அனைவராலும் தோழர் பா.க என்றழைக்கப் படும் ப.கருணாநிதியின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.