districts

தஞ்சை சரபோஜி சந்தை சாலையோர வியாபாரிகள் சாலை மறியல்

தஞ்சாவூர், ஆக.20 -  தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகி லிருந்து, ஜூபிடர் திரைய ரங்கம் வரை சாலையோரம் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் வடிகால் கட்டப்படு கிறது. இதைத் தொடர்ந்து  ஜூபிடர் திரையரங்கத்தி லிருந்து சரபோஜி சந்தை  வரை வடிகால் கட்ட நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சாலையோரம்  உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி அலு வலர்கள் வெள்ளிக்கிழமை நடவடிக்கை எடுத்தனர். இதில், சாலையோரமுள்ள 15 கடைகள் மற்றும் தரைக் கடைகள், தள்ளுவண்டி கடைகள் போன்றவையும் அகற்றப்பட்டன. இதனால் வாழ்வாதாரத்தை இழந்த  தரைக்கடைகள், தள்ளு வண்டி கடை வியாபாரிகள் தங்களுக்கு வியாபாரம் செய்ய இடம் ஒதுக்கீடு செய்யுமாறு மாநகராட்சி அலுவலர்களிடம் வலியு றுத்தினர். இதையடுத்து, இவர்களுக்கு சரபோஜி சந்தை வளாகத்தில் மாநக ராட்சி அலுவலர்கள் இடம் வழங்கினர். ஆனால், இதற்கு ஏற்கெ னவே அங்கு கடை நடத்தி வரும் வியாபாரிகளிடையே அதிருப்தி ஏற்பட்டது. கடைக்கு ரூ.6,000 வாடகை  கொடுத்து வியாபாரம் செய்து  வரும் தங்களுக்கு வாழ்வா தாரம் பாதிக்கப்படும் என ஆணையரிடம் சரபோஜி சந்தை வியாபாரிகள் முறை யிட்டனர்.  இதற்கு சரியான பதில் கிடைக்காததால், வியாபாரிகள் சந்தை முன்பு வெள்ளிக்கிழமை பிற்பக லில் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர்.  தகவலறிந்த மேற்கு காவல் துறையினர் நிகழ் விடத்துக்குச் சென்று போராட் டத்தில் ஈடுபட்ட வியா பாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், இப்பிரச் சனை தொடர்பாக திங்கள் கிழமை பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், அது வரை சந்தையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட தரைக்கடை வியாபாரிகள் அப்புறப்படுத்தப்படுவர் என வும் ஆணையர் தரப்பில் தெரிவித்ததாகக் கூறப்படு கிறது. இதையடுத்து, வியா பாரிகள் மறியல் போராட்டத் தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

;