districts

img

பெரியார் மணியம்மை பல்கலை.யில் ரஷ்ய நடன விழா

தஞ்சாவூர், ஜன.22 -  தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) இந்தோ – ரஷ்ய வர்த்தகம் மற்றும் தொழில் துறை, இந்தோ – ரஷ்ய கலாச்சாரம் மற்றும் நட்பு அமைப்பு இணைந்து ரஷ்ய நடன திருவிழாவை சனிக்கிழமை நடத்தினர். இந்நிகழ்ச்சியை பல்கலை.யின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி தலைமை வகித்து தொடங்கி வைத்துப் பேசினார். பல்கலைக்கழக துணைவேந்தர் செ.ம.வேலுச்சாமி, பதிவாளர் ஸ்ரீவித்யா மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், ரஷ்ய நடனக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் எலினா, ப.தங்கப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  தொடர்ந்து, தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் ரஷ்ய கலைஞர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மேயர் சண்.ராமநாதன், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.