districts

img

‘ஒன்றிய கொள்ளை அரசே வெளியேறு’ சிஐடியு, விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்/அரியலூர், ஆக.8 -  ஆக.8 வெள்ளையனே வெளியேறு தினத்தை முன்னிட்டு மோடி தலைமையிலான ‘ஒன்றிய கொள்ளை அரசே வெளியேறு’ கண்டன முழக்க இயக்கம் சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தஞ்சாவூர் ரயிலடியில் திங்கள்கிழமை நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், வி.தொ.ச மாவட்டச் செயலாளர் கே.பக்கிரிசாமி, மாவட்டப் பொருளாளர் கே.அபிமன்னன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, டாஸ்மாக் சங்கம் மாவட்டத் தலைவர் மதியழகன், மாட்டுவண்டி சங்க நிர்வாகிகள் கோவிந்தராஜ், பொன்னுச்சாமி, ஆட்டோ சங்கம் ராஜா உள்ளிட்ட ஏராளமானோர், ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர், விவசாயிகள் விரோத ஜனநாயக விரோதச் செயல்களை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
அரியலூர்
வெள்ளையனே வெளியேறு இயக்க நாளில் மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து சிஐடியு - ஏஐேகேஎஸ், ஏஐஏடபுள்யூயு சார்பில் மாநில தழுவிய ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணாசிலை அருகில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் துரைசாமி, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் மகாராஜன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சவுரிராஜன் தலைமை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இளங்கோவன் கண்டன உரையாற்றினார். 

;