கும்பகோணம், ஜூலை 18- தஞ்சை மாவட்டம் கும்ப கோணத்தைச் சேர்ந்த கார்த் திக் என்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவேகானந்தா ஆசிரம உத வியுடன் பட்டயக் கல்வி பயின்றார்.
படிப்பை முடித்துவிட்டு கார்த்திக் கடந்த மாதம் தனி யார் நிறுவனத்தில் வேலைக் குச் சேர்ந்தார். இந்நிலை யில் தனது முதல் மாதச் சம்ப ளத்தை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு நிதியாக வழங்குவது என முடிவு செய்தார்.
கட்சியின் தஞ்சை மாவட் டச் செயலாளர் சின்னை. பாண்டியனிடம் தனது முதல் மாதச் சம்பளம் ரூ.10 ஆயி ரத்தை வழங்கினார்.
நிதி வழங்கிய கார்த்திக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்பகோணம் மாநகரச் செயலாளர் செந் தில்குமார், மாதர் சங்க மாந கரச் செயலாளர் சுமதி ஆகி யோரின் மகன் ஆவார்.
கார்த்திக்கின் பெற்றோர், தமுஎகச நகர செயலாளர் கார்த்திக், அசோக்குமார், கிளை செயலாளர் ஜோதி ஆகியோர் உடனிருந்தனர்.