districts

தஞ்சாவூரில் இதுவரை 2,924 நாய்களுக்கு கருத்தடை

தஞ்சாவூர், டிச.3 -  தஞ்சாவூர் மாநகரில் இதுவரை 2, 924  நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.  

தஞ்சாவூர் மாதாகோட்டை சாலையி லுள்ள தஞ்சை மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தின் விலங்குகளுக்கான கருத்தடை மையத்தில் திங்கள்கிழமை நடை பெற்ற பயிற்சி முகாமில் அவர் மேலும் பேசுகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார்  15 ஆயிரம் தெரு நாய்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில், தஞ்சாவூர் மாநகரில் 4 ஆயிரம் நாய்களும், கும்பகோ ணம் மாநகரில் 3,500 நாய்களும், இதர பகுதிகளில் மீதி நாய்களும் உள்ளன.

தஞ்சாவூர் மாநகராட்சி மற்றும் கும்பகோ ணம் மாநகராட்சிப் பகுதியில் மட்டுமே தெருவில் சுற்றித் திரியும் நாய்களைப் பிடித்து கருத்தடை செய்யப்படுகிறது.  தஞ்சாவூர் மாநகராட்சிப் பகுதியில் மட்டும் 2023, ஜூன் 1 ஆம் தேதி முதல் 2024 நவம்பர் 30 ஆம் தேதி வரை மொத்தம் 2,924  தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட் டுள்ளது.

இதேபோல, கும்பகோணம் மாநகராட்சிப் பகுதியில் இதுவரை 50 சத வீத நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு உள்ளது. தற்போது நடைபெற்ற பயிற்சி மூலம் அடுத்த கட்டமாக அனைத்து நகராட்சி,  பேரூராட்சி, ஊராட்சி சுகாதாரப் பணியா ளர்களுக்கு தெரு நாய்களைப் பிடிக்கும் பணி வழங்கப்படவுள்ளது.  இனிவரும் காலங்களில் மாவட்டத்தி லுள்ள நகராட்சி, பேரூராட்சி, கிராமப்புறங் களில் சுற்றித் திரியும் நாய்களைப் படிப்படி யாகப் பிடித்து கால்நடைத் துறையின்கீழ் இயங்கி வரும் மருத்துவமனைகளில் கருத்தடை செய்யப்படும்” என்றார். மேலும்,  நாய்களைப் பிடிக்கும்போது கையாள வேண்டிய நெறிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.