districts

img

கொரோனா நிவாரண நிதியாக 2 பவுன் செயினுடன் வேலைகேட்டு முதல்வரிடம் மனு அளித்த பெண்ணிற்கு பணி ஆணை

சேலம், ஜூன் 16- கொரோனா நிவாரண நிதி யாக தமிழக முதல்வரிடம் 2 பவுன் தங்க செயினை அளித்து, அதனுடன் வேலை கேட்டு மனு அளித்திருந்த பெண்ணிற்கு மூன்றே நாளில், பணி ஏற்பாடு செய்து, பணி ஆணையை அமைச்சர் செந்தில்பாலாஜி அவரது வீட்டுக்கே சென்று வழங்கினார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூன் 12  ஆம் தேதி மேட்டூர் அணையி லிருந்து டெல்டா பாசனத் திற்கு தண்ணீர் திறந்து விட்டார். சேலத்திலிருந்து அவர் மேட்டூர் செல்லும் வழி யில் பொட்டனேரி பகுதி யில் சாலை ஓரம் நின்றிருந்த பொறியியல் பட்டதாரி செளமியா (22) முதல்வரி டம் கொரோனா நிவாரண நிதிக்காக தான் அணிந்தி ருந்த 2 பவுன் செயினை கழற்றிக்கொடுத்தார்.அதோடு, தனது குடும்ப சூழலை விவரித்து வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனு ஒன்றையும் அளித்திருந்தார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் “பொன்மகளுக்கு படிப்புகேற்ற வேலை வழங் கப்படும்” என தெரிவித்தி ருந்தார்.அதன்படி மேட்டூர் அருகே பொட்டனேரியில் செயல்படும் ஜேஎஸ்டபிள்யூ என்ற தனியார் நிறுவனத்தில் செளமியாவுக்கு மாதம் ரூ.17 ஆயிரம் சம்பளத்தில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. இதையடுத்து, செவ்வா யன்று தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, பொட்டனேரியிலுள்ள செளமியாவின் வீட்டிற்கு நேரில் சென்று பணி நியம னத்துக்கான ஆணையை வழங்கினார். அப்போது தமி ழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் செளமி யாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார், செளவியாவும் தனது கோரிக்கையை உட னடியாக நிறைவேற்றிய தமி ழக முதல்வருக்கு நன்றி களை தெரிவித்து கொள்கி றேன் என்றார்.

மேலும் முதல் வர், இவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுத்து எனக்கு பணி நியமன ஆணை வழங் கியது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்வரின் நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன்.உண் மையாக உழைப்பேன் என் றார். இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சியர் செ.கார் மேகம், முன்னாள் அமைச் சர் டி.எம்.செல்வகணபதி, செளமியா மற்றும் அவரின் தந்தை ஆர்.இராதா கிருஷ் ணன் உட்பட பலர் உடனி ருந்தனர்.

;