districts

img

வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெறுக வாலிபர்கள் இருசக்கர வாகனப் பிரச்சாரம்

சேலம்,ஜன.24- விவசாயிகளை பாதிக்கும் புதிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சேலத்தில்  இரு சக்கர வாகன பேரணி நடத்தினர்.

மத்திய பாஜக அரசு விவசாயத்தை அழிக்கும் மூன்று புதிய சட்டங்களை  இயற்றியுள்ளது. இதனை எதிர்த்து தில்லியில் கடந்த இருமாதங்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள் ளனர். இந்த போராட்டத்தை ஆதரித் தும், வேளாண் விரோத சட்டங்களை ரத்து செய்யக்கோரியும் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின்  சேலம் மேற்கு  மாநகரக் குழு சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

வாலிபர் சங்கத் தின் மாநகர தலைவர் கண்ணதாசன் தலைமையில்  திருவகவுண்டனூர் பைபாஸ் சாலையில் இருந்து துவங்கிய இந்த பேரணியை சிபிஎம் சேலம் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி கொடி யசைத்து துவக்கி வைத்தார்.  சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம். குணசேகரன், மாநகர மேற்கு செயலாளர் எம். கனகராஜ், மாவட்ட குழு உறுப்பினர் பி. பாலகிருஷ்ணன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஞானசௌந்தரி ஆகியோர் வாழ்த்தி பேசினார். இப் பேரணியில் வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கணேசன், மாநகர செயலாளர் ஜெகநாதன், மாநகர பொரு ளாளர் கார்த்தி உள்ளிட்ட ஏராளமான வாலிபர்கள் கலந்து கொண்டனர்.

;