districts

img

விவசாயிகள் விளைநிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்

சேலம், மே 18-

விவசாயிகளின் விளைநிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்கும் திட் டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதி யில் விவசாயிகள் விளைநிலத்தில், விவசாயிகள் அனுமதியின்றி தமிழ் நாடு அரசின் உயர்மின் கோபுர பணிகள் சமீபத்தில் துவங்கப்பட்டது. பாதிக்கப்படும் விவசாயிகளும், தமிழ் நாடு விவசாயிகள் சங்கமும் போராடி, கொரானா ஊரடங்கு முடியும் வரை பணிகள் மேற்கொள்ள கூடாதென சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் சங்ககிரி கோட்டாட்சியர் அறிவுறுத்த லின் பேரில் பணிகள் சங்ககிரி பகுதி யில் ஓரிரு நாட்கள் நிறுத்தி வைக்கப் பட்டது. ஆனால், எடப்பாடி பகுதியில் அப்பணிகள் விவசாயிகளை மிரட்டி அல்லது ஏமாற்றி துவங்கப்பட்டது. தகவல் அறிந்த தவிச மாவட்ட, வட்ட நிர்வாகிகள் நேரில் சென்று பணிகளை விவசாயிகளுடன் சேர்ந்து தடுத்து நிறுத்தி உள்ளனர்.  

மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் ஆகி யோர்களின் அறிவுறுத்தல்களை அலட்சியப்படுத்திவிட்டு, மேச்சேரி யில் செயல்படும் ஜிண்டா இரும்பா லைக்கு ஆதரவாக தமிழ்நாடு மின் துறை அதிகாரிகள் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். மின் அதிகாரி களின் இத்தகைய விவசாயிகள் விரோ தப் போக்கிற்கு தவிச தனது கண்ட னத்தையும் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாடு மின்வாரியத்தின் இத்தகைய விவசாயிகள் விரோத செயல்கள் தொடருமேயானால், பாதிக்கப்படும் விவசாயிகளைத் திரட்டி வலுவான போராட்டத்தை நடத்தப்போவதாக தெரிவித்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேலம் மாவட்ட செயலாளர் ஏ.ராம மூர்த்தி,  நாமக்கல் மாவட்ட செயலா ளர் பி. பெருமாள், சங்ககிரி தாலுகா செயலாளர் ஆர்.ராஜேந்திரன், எடப் பாடி தாலுக்கா தலைவர் கே.லோக நாதன் மற்றும் சின்னுசாமி உள்ளிட் டோர் பாதிக்கப்படும் விவசாயிக ளைத் திரட்டி பணிகளை தடுத்து நிறுத்தினர்.

;