districts

img

முழு ஊரடங்கால் முடங்கியது மாம்பழ விற்பனை

சேலம், மே 16- முழு ஊரடங்கால் கொரியர், பார்சல் சேவை நிறுத்தப்பட்டதால் நடப்பாண்டு சீசனில் சேலத்தில் இருந்து வெளியூர்களுக்கு மாம்பழம் அனுப்புவது பாதிக்கப்பட்டு தேங்கியுள்ளது. இந்தியாவில் மாம்பழம் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மாமரங்கள் அதிகளவில் உள்ளன. இந்த பகுதிகளில் அல்போன்சா, மல்கோவா, இமாம்பசந்த், சேலம் பெங்களூரா, நடுசாலை, சூதாத்த் உட்பட பல்வேறு வகையான மாம்பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. இங்கு பறிக்கப்படும் மாம் பழம் இந்தியாவில் பல பகுதிகளுக்கும், இதைத்தவிர அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, துபாய், ஆஸ்தி ரேலியாக உள்ளிட்ட வெளி நாடுகளுக்கும் ஆண்டுதோறும் அனுப்பப்படுகிறது.

நடப்பாண்டு கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் மாமரங்களில் ஓரள வுக்கு நல்ல முறையில் மாம் பழம் விளைச்சல் கண்டுள் ளது. ஆனால், கொரோனா 2வது அலை காரணமாக தள்ளுவண்டி கடைகள், சாலையோரக் கடைகள் செயல்பட தடை விதிக்கப் பட்டுள்ளது. மேலும், வழக்க மாக சீசனில் மாம்பழம் வியாபாரம் களை கட் டும். வெளி மாவட்டம், மாநி லங்களுக்கும் பெருமளவில் அனுப்பி வைக்கப்படும். ஆனால், நடப்பாண்டு சீசனில் முழு ஊரடங்கு காரணமாக விற்பனை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சேலம் மாம்பழம் மொத்த வியாபாரி கள் கூறியதாவது, ஒவ்வொரு ஆண்டும் மாம்பழ சீசனில் சேலத்தில் இருந்து பல டன் மாம்பழங்கள் உள்ளூர் தேவைக்கும், வெளி மாநிலம், வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.

டப் பாண்டு மாம்பழம் சீசன் கடந்த ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தொடங்கியது. தற்போது மாம்பழம் சீசனில் உச்சக்கட்ட காலமாக உள்ளது. இந்த காலக்கட்டத்தில் மார்க்கெட்டுக்கு தினசரி 30 முதல் 40 டன் மாம்பழம் விற்பனைக்கு வருகிறது. நடப்பாண்டு மாம்பழம் சீசன் தொடங்குவதற்கு முன்பே கொரோனா 2வது அலை வேகமாக பரவியது. இதன் காரணமாக கடந்த மே 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாம்பழம் விற்பனை செய்ய கடைகள் இல்லை. இதனால் விவசாயிகள் பழத்தை பறிக்காமல் மரத்திலேயே விட்டு வைத்துள்ளனர். ஒருசிலர் மாம்பழங்களை பறித்து தோப்பில் வந்து கேட்பவர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இது வழக்கமாக நடக்கும் வியாபாரத்தில் 20 சதவிகிதம் தான். மீதியுள்ள 80 சதவிகிதம் மாம்பழங்களை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

கொரோனா முழு ஊரடங்கு கெடுபிடியால் மரங்களில் பழுக்கும் மாம்பழங்களை பறித்து மார்க்கெட்டுக்கு கொண்டு வர விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மாம்பழ சீசனில் பெங்களூர், ஹைதராபாத் உட்பட பல பகுதிகளுக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் பெட்டிகள் சேலத்தில் இருந்து அனுப்பப்டும். இதன் மூலம் வியாபாரிகளுக்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். தற்போது கொரியர், பார்சல் சேவை இல்லாததால் நடப்பாண்டு இந்த பகுதிகளுக்கு மாம்பழங்கள் செல்லவில்லை. அதேநேரத்தில் உள்ளூரில் கடையை விரித்து வியாபாரம் செய்யும் வசதியும் இல்லை. இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் எப்படி மாம்பழத்தை விற்பனை செய்வது என்று தெரியாமல் அவதிப்பட்டு வருகின்றனர் என அவர்கள் தெரிவித்தனர்.

;