districts

img

போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் கெளடா எச்சரிக்கை

சேலம், ஜூலை 31- கஞ்சா, குட்கா கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடு வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் கெளடா தெரிவித்துள்ளார். சேலம் - சென்னை தேசிய நெடுஞ் சாலையில்  உதவி ஆணையாளர் ஆனந்தகுமார் மற்றும் காவல்துறை யினர் வெள்ளியன்று இரவுநேர ரோந் துப் பணியில் ஈடுபட்டிருந்தனர் அதி காலை 4 மணி அளவில் கணேஷ் கல் லூரி அருகே வாகனத்தில் மூட்டை களை ஏற்றிக் கொண்டிருந்த நபர் களை பிடித்து விசாரித்தபோது லாரி யில் இருந்த 4 பேர் தப்பி ஓடிவிட்ட னர். இதனைத்தொடர்ந்து லாரியை சோதனை செய்தபோது மாட்டுத் தீவன மூட்டை நடுவே 50க்கும் மேற் பட்ட குட்கா மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இரண்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல சேலம் சீல நாயக்கன்பட்டி பகுதியில் அன்ன தானப்பட்டி காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது இரண்டு லாரி கள் நிற்பதைக் கண்டு சோதனை செய்தனர். அதில் 248 மூட்டை மூட்டை  குட்கா இருப்பது தெரியவந்தது இத னைத்தொடர்ந்து இரண்டு லாரிகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய் யப்பட்ட லாரியில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான குட்கா இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட குட்காவை மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் கெளடா நேரில் பார்வையிட்டார். இத னைத்தொடர்ந்து செய்தியாளர்களி டம் கூறுகையில், சேலம் மாவட்டத் தில் தடை செய்யப்பட்ட பொருட் களை கட்டுப்படுத்த தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், மேலும் சட்ட விரோதமாக குட்கா, லாட்டரி, சாரா யம், கஞ்சா உள்ளிட்ட சட்டவிரோத செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்ப டும் என்றும், பல்வேறு குற்றச்செயல் களில் ஈடுபட்ட 4 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும், அவர் கூறும்போது சேலம் மாநகரில் இரண்டு இடங்க ளில் பிடிபட்ட 3 லாரிகளில் சுமார் ரூபாய் ஒரு கோடிக்கும் அதிக மதிப்பி லான பொருட்களை பறிமுதல் செய் யப்பட்டுள்ளது என்றும் இந்த குட்கா  கடத்தலில் ஈடுபட்ட லாரி உரிமையா ளர் மற்றும் டிரைவர் உள்ளிட்ட சம் பந்தப்பட்ட நபர்களை விரைந்து பிடிக்க தனிப்படை காவல்துறையி னர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க சேலம் மாநகர காவல்துறையினர் தீவிரமான சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.

;