districts

img

சேலத்தில் பொதுத்துறைகள் பாதுகாப்பு கருத்தரங்கம்

சேலம்,பிப். 28-

சேலம் மாவட்ட அனைத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் பொதுத் துறைகள் பாதுகாப்பு கருத்தரங்கம் சேலம் எல்ஐசி அலுவலக வளாகத்தில் ஞாயிறன்று நடைபெற்றது.

இந்தியாவின் பொதுத்துறை நிறு வனங்களான எல்ஐசி, பிஎஸ்என்எல், பொதுகாப்பீட்டு நிறுவனங்கள், வங்கி கள், விவசாயம் என அனைத்துத் துறை களையும் ஆத்ம நிர்பார் பாரத் திட்டம் என்ற பெயரில் அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், இந்தியப் பெரு முதலாளிகளுக்கும் தாரை வார்க்கும் வகையில், மத்திய பாஜக அரசு கடந்த பட்ஜெட்டில் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சிக்கும், சுயசார்பு பொருளாதாரத்திற்கும், வேலை வாய்ப்பிற்கும் அடிப்படையாக திக ழும் பொதுத்துறை நிறுவனங்கள், வேளாண் துறை பாதுகாப்பதில்  தொழி லாளர் வர்க்கத்தின் இன்றைய முதற் கடமையாக உள்ளது.

மத்திய அரசின் தனியார்மய கொள் கைகளை திரும்பப்பெற வலியுறுத்தி நாடெங்கிலும், தொழிலாளர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒருபகுதியாக பொதுத் துறைகள் பாதுகாப்பு கருத்தரங்கம் எல்ஐசி காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சேலம் கோட்டத் தலைவர் ஆர்.நரசிம் மன் தலைமையில் சேலம் எல்ஐசி அலுவலக வளாகத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி னார்.

இதில், தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டி.செந்தில்குமார் கருத்து ரையாற்றினார்.

இதில், சிஐடியு மாநிலக்குழு உறுப் பினர் ஆர்.வெங்கடபதி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலை வர் முருகப்பெருமாள், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் இ.கோபால், மத்திய மாநில பொதுத் துறை ஓய்வூதியர்கள் ஒருங்கிணைப் புக்குழு தலைவர் எம்.முருகேசன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட உதவித் தலைவர் கே. ராஜாத்தி, இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் கே.பகத்சிங், இந் திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட் டப் பொருளாளர்  வி.வெங்கடேஷ், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாவட்டத் தலைவர் குழந்தை வேல், தமிழ்நாடு மலைவாழ் இளைஞர் சங்க பொதுச் செயலாளர் என்.பிரவீன் குமார்,  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் சங்க மாவட்டச் செயலாளர் நிறை மதி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

நிறைவாக, காப்பீட்டு கழக ஊழி யர் சங்க சேலம் கோட்ட பொதுச்செய லாளர் ஆர்.தர்மலிங்கம் நன்றி தெரி வித்தார்.

;